ஏர்ட்சு
ஏர்ட்சு (ஹெர்ட்ஸ், Hertz, Hz) அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைபெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி−1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும். கிலோ ஹெர்ட்ஸ் kilohertz (103 Hz, குறியீடு KHz), மெகா ஹெர்ட்ஸ் megahertz (106 Hz,குறியீடு MHz), கிகா ஹெர்ட்ஸ் gigahertz (109 Hz, குறியீடு GHz), and டெரா ஹெர்ட்ஸ் terahertz (1012 Hz,குறியீடு THz) போன்ற அலகின் மடங்குகளால் அளக்கப்படுகிறது. சைன் அலைகள், கணிணியின் வேகம், மின்னணு கருவிகளின் செயல்பாடு மற்றும் இசை இயக்கங்களை அளக்க ஹெர்ட்ஸ் பயன்படுகிறது.
ஏர்ட்சு Hertz | |
---|---|
அலகு முறைமை | SI derived unit |
அலகு பயன்படும் இடம் | அதிர்வெண் |
குறியீடு | ㎐ |
பெயரிடப்பட்டது | ஐன்ரிக் ரூடால்ப் ஏர்ட்சு |
அடிப்படை SI அலகுகளில்: | 1 Hz = 1 நொடி-1 |
மின்காந்த அலைகள் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.