மிர்மிக்கள் (புராண உயிரினம்)

எறும்பு வடிவம் கொண்ட கிரேக்க புராண விலங்கு

மிர்மிக்கள் (Μύρμηκες) என்பது எறும்பு வடிவம் கொண்ட கிரேக்க புராண விலங்குகள் ஆகும். கிரேக்க மொழியில் மிர்மிக்கள் என்பதற்கு எறும்புகள் என்று பொருள் படும்.மேலும் ஒரு கிரேக்க பழங்குடியினர்களும் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றனர்.

ஆடைகள் அணிந்த மனிதன் பார்த்துக்கொண்டிருக்க, மூன்று நாய் அளவு பெரிதான எறும்புகள் ஒரு கட்டப்பட்ட ஒட்டகத்தைத் தாக்குகின்றன,

புராண இலக்கியம்

தொகு
  • மிர்மிடான்கள், என்ற வகை பழங்குடி மக்கள் இந்த புராண எறும்புகளை மாற்றியதன் மூலம் கிரேக்க கடவுள் ஜீயஸால் உருவாக்கப்பட்டனர் . [1]
  • ஹெரோடோடஸ், இந்தியாவில் தங்கம் தோண்டும் எறும்புகளைப் பற்றி எழுதினார், அவரின் கருத்துக்கள் படி அந்த எறும்புகள், நாய்களை விட சிறியவை, ஆனால் நரிகளை விட பெரியவையாக இருந்தது. [2]
  • ஏலியன், பின்வருமாறு எழுதியுள்ளார்: "தங்கத்தைக் காக்கும் இந்திய எறும்புகள் காம்பிலினஸ் நதியைக் கடக்காது". [3]
  • இந்தியாவிலிருந்து வந்த கிரேக்க மாலுமிகள் மிர்மிக்களுடன் நேரில் சந்தித்த கதைகளை பின்வருமாறு சொல்லியுள்ளனர். அவை எறும்புகளின் இனமாகும், அவைகள் அளவில் சிறிய நாய்கள் முதல் ராட்சத கரடிகள் வரை இருக்கும், அவை ஏராளமான தங்க கட்டிகளை தன்னுள் கொண்டுள்ள மலையைக் காக்கும் பணியில் இருக்கும் . உள்ளூர் பழங்குடியினர் மிர்மிக்களால் கொல்லப்படாமல் அந்த தங்கத்தை எடுப்பதற்கு பல்வேறு  சூழ்ச்சிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

கலாச்சார வெளிப்பாடுகள்

தொகு
  • பெர்சி ஜாக்சன் & ஒலிம்பியன்ஸ் புத்தகமான தி டெமிகாட் ஃபைல்ஸில் உள்ள கதைகளில் ஒன்றான '''வெண்கல டிராகன்''' என்பதில் மிர்மிக்கள் பற்றி  குறிப்பிடப்பட்டுள்ளது. கதைமாந்தர்கள் தாங்கள் கண்டுபிடித்த ஒரு வெண்கல டிராகன் தலையை மீட்டெடுக்க முயற்சிக்கும் போது, சார்லி பெக்கெண்டோர்ஃப் அவர்களைப் பிடித்து மிர்மிக்களின்  எறும்புப் புற்றில் போடப்படுகின்றனர். பெர்சி ஜாக்சன் மற்றும் அன்னாபெத் சேஸ் ஆகியோர் வெண்கல டிராகனை மீண்டும் இணைக்க சிலேனா பியூரெகார்ட் உதவினார், அதனால் அந்த வெண்கல டிராகன் அழிவை ஏற்படுத்தும் மிர்மிக்களின்பிடியில் இருந்து சார்லியை மீட்க உதவுகிறது..
  • அவைகள்அப்பல்லோவின் விசாரணை புத்தகத்தில் உள்ள மறைக்கப்பட்ட ஆரக்கிள் என்ற கதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்பல்லோ கடவுளும் அவரது நண்பரான மெக் மெக்காஃப்ரியும், அப்பல்லோவின் காணாமல் போன இரண்டு குழந்தைகளைத் தேடுவதற்காக காடு வழியாக நடந்து கொண்டிருந்தபோது, பாதியாக உடைந்திருந்த ஒரு மிர்மிக்களின் உடலைக் கண்டனர். அதைப்பார்த்த அப்போலோ ஏதோ ஒரு வலிமையான விலங்கு இந்த எறும்பை கடித்து பாதியாக துண்டித்திருக்கலாம் என சந்தேகித்தார். பின்னர், இருவரும் பாலிகோயை (கீசர் கடவுள்கள்) சந்தித்தபோது, அவர்களில் ஒருவரான பீட், ஒரு செறிகற்றை விளக்கின் மூலம், மூன்று  மிர்மிக்களின் கவனத்தை ஈர்த்தார். சண்டைக்குப் பிறகு, எறும்புகள் மெக்வைக் கைப்பற்றின. பின்னர், அப்பல்லோ மெக்கைக் காப்பாற்றியபோது, அவர்கள் அதன் ராணி எறும்பை எதிர்கொண்டு சண்டையிட்டனர், இது மற்ற எறும்புகளை விட மூன்று மடங்கு பெரியது.

மேலும் பார்க்கவும்

தொகு
  • தங்கம் தோண்டும் எறும்பு

மேற்கோள்கள்

தொகு