மிர்-885 நுண்ணிய ஆர் என் ஏ முன்னோடி குடும்பம்

மூலக்கூறு உயிரியலில் மிர் -885 நுண்ணிய ஆர் என் ஏ என்பது குட்டையான ஆர் என் ஏ ஆம். பல்வேறு எயந்திரநுட்பத்தின்போது மற்ற மரபன்களின் பண்புகள் வெளிப்படுவதை ஒழுங்குபடுத்தும் பணியை நுண்ணிய ஆர் என் ஏ செய்கிறது

மிர்-885-5பி வின் நரம்புமுகைப்புற்று தொகு

நுண் ஆர் என் ஏ வின் மிர்-885-5p வடிவம் நரம்புமுகைப்புற்றில் கலச் சுழற்சி வளர்ச்சியிலும் கல வாழ்விலும் தலையிட்டு புற்று அடைப்பானாகச் செயல்படுகிறது. இது 3p25.3, குறுமவகப் பகுதியில் அடிக்கடி முதன்மையான நரம்புமுகைப்புற்றில் இருந்து நீக்கப்படுகிறது,[1] இதன் வெளிப்பாடு p53|p53 புரதத் திரள்விலும் தடவழி செயல்முனைப்பாக்கத்திலும் விளைகிறது.பல மரபணுக்களின் மாற்றியமைக்கப்பட்ட வெளிப்பாடு நுண் -885-5 பியுடன் காணப்படுகின்றன, இதில் CDK2, MCM5 மரபணுக்கள், குறியாக்கச் சுழற்சி சார்ந்த கைனேஸ் 2, மினி-குறுமவகப் பேணல் புரதம் MCM5, பல p53 இலக்கு மரபன்கள் ஆகியன உள்ளன.

உயிரியல் தாக்கம் தொகு

மருத்துவ உயிரியல் குறிப்பான் தொகு

நுண் ஆர் என் ஏக்களைச் சுற்றவிடுதல் நோய்நிலைமைகளை அறியும் உறுதியான வாய்ப்பாக உருவாகியுள்ளது. அவை நோயறியும் உயிரியல் குறிப்பான்களாகச் செயல்படுகின்றன, மிர்-885-5p கல்லீரல் நோயறியவல்ல உயிரியல் குறிப்பானாக அமைகிறது. கல்லீரல் நோய்களில் குருதி ஊனீரில் நுண் ஆர் என் ஏ வின் இவ்வகையைக் கணிசமாகக் கூட்டி, அந்த ஊனீர் ஆர் என் ஏ க்கள் நோயுணர்த்தும் விளைவுமிக்க உயிரியல் குறிப்பான்களாகச் செயல்படுவதை ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.[2]இந்தத் தனித்த நுண் ஆர் என் ஏ க்களை மருத்துவ ஆய்வில் பயன்படுத்தி, பெருங்குட மலக்குடல் புற்றுகளில்(CRC) உள்ள தொலைநிலை புற்றாக்கத்தை முன்கணித்து அறியலாம். முதன்மை பெருங்குடல் மலக்குடல் புற்றுகளில் அமையும் புற்றரியும் குறிப்பிட்ட நுண் ஆர் என் ஏ க்களின் வெளிப்பாட்டு பாணிகளை நேரடியாக ஒப்பிட்டு, கல்லிரல் புற்றாக்க நிகழ்வோடு இணைதுப் பார்த்து இவை புர்ரக்கத் தனிநிலைகளைச் சுட்டும் உயிரியல் குரிப்பான்களாகச் செயல்பட வாய்ப்புள்ளனவா என அறியலாம்..[3]

புற்றுநோய் தொகு

பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையை முன்னேற்றுவதற்கான ஒரு பயனுள்ள சிகிச்சை முறையை கண்டுபிடிப்பதில் மிர் -885-3p ஒரு பங்கு வகிக்கிறது. BMPR1A ஐ இலக்காகக் கொண்ட ஒரு கட்டி குழலகப் புற்றாக்கத்தில் காணப்படுகிறது. மிர் -885-3p புற்றாக்க முன்மரபுக் காரணியை ஒழுங்குபடுத்துகிறது. எனவே, நுண் ஆர் என் ஏ வை இலக்காக கொண்டு திறமையான சிகிச்சையைச் செய்யலாம் என்பது தெளிவாகியுள்ளது.[4]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "MicroRNA miR-885-5p targets CDK2 and MCM5, activates p53 and inhibits proliferation and survival.". Cell Death Differ 18 (6): 974–84. 2011. doi:10.1038/cdd.2010.164. பப்மெட்:21233845. 
  2. Gui, Junhao; Tian, Yaping; Wen, Xinyu; Zhang, Wenhui; Zhang, Pengjun; Gao, Jing; Run, Wei; Tian, Liyuan et al. (2011-03-01). "Serum microRNA characterization identifies miR-885-5p as a potential marker for detecting liver pathologies". Clinical Science 120 (5): 183–193. doi:10.1042/CS20100297. பன்னாட்டுத் தர தொடர் எண்:1470-8736. பப்மெட்:20815808. 
  3. Hur, Keun; Toiyama, Yuji; Schetter, Aaron J.; Okugawa, Yoshinaga; Harris, Curtis C.; Boland, C. Richard; Goel, Ajay (March 2015). "Identification of a metastasis-specific MicroRNA signature in human colorectal cancer". Journal of the National Cancer Institute 107 (3). doi:10.1093/jnci/dju492. பன்னாட்டுத் தர தொடர் எண்:1460-2105. பப்மெட்:25663689. 
  4. Xiao, F.; Qiu, H.; Cui, H.; Ni, X.; Li, J.; Liao, W.; Lu, L.; Ding, K. (2015-04-09). "MicroRNA-885-3p inhibits the growth of HT-29 colon cancer cell xenografts by disrupting angiogenesis via targeting BMPR1A and blocking BMP/Smad/Id1 signaling". Oncogene 34 (15): 1968–1978. doi:10.1038/onc.2014.134. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-5594. பப்மெட்:24882581.