மிர் அப்துல் கய்யூம்
மிர் அப்துல் கய்யூம் (Mir Abdul Qayyum) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒர் உளவியலாளர் ஆவார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் போது இவர் கொல்லப்பட்டார். வங்காள தேச விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகியாக மிர் அப்துல் கய்யூம் கருதப்படுகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு1939 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் தேதியன்று மைமன்சிங் கோட்டத்திலுள்ள காக்ராவில் கய்யும் பிறந்தார். 1956 ஆம் ஆண்டு கஃபர்கான் இசுலாமியா உயர்நிலைப் பள்ளியிலும், 1958 ஆம் ஆண்டு கஃபர்கான் கல்லூரியிலும் படித்து கய்யும் பட்டம் பெற்றார். ஆனந்த மோகன் கல்லூரியில் 1960 ஆம் ஆண்டு முதுநிலை பட்டமும் 1962 ஆம் ஆண்டு ராச்சாகி பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் படித்து முதுநிலை பட்டமும் பெற்றார்.[1]
தொழில்
தொகுகாந்திபாரா அசுகர் அலி மேல்நிலைப் பள்ளியிலும் கஃபர்கான் கல்லூரியிலும் கய்யும் ஆசிரியராகப் பாடம் கற்பித்தார். 1966 ஆம் ஆண்டு உளவியல் துறை விரிவுரையாளராக ராச்சாகி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். முன்னதாக கய்யும் இந்த துறையின் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கித்தானில் நடைபெற்ற மக்கள் எழுச்சி இயக்கத்தில் பங்கேற்றார்.
இறப்பு
தொகுகய்யும் 25 நவம்பர் 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று கய்யும் பாக்கித்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாக்கித்தான் இராணுவத்தால் மற்றவர்களுடன் சேர்த்து உயிருடன் புதைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Faiquzzaman, Mohammad. "Qayyum, Mir Abdul". en.banglapedia.org (in ஆங்கிலம்). Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.