மிர் லைக் அலி கான், இரண்டாம் சலார் ஜங்

ஐதராபாத்து இராச்சியத்தின் திவான்

மிர் லைக் அலி கான், இரண்டாம் சலார் ஜங் (இறப்பு 7 ஜூலை 1889) ஐதராபாத் மாநிலத்தின் முன்னாள் பிரதமர் ஆவார் (1884-1887). சாலர் ஜங் குடும்பத்தைச் சேர்ந்தவர். ' வாகயே-இ மொசாஃபெரட் ' என்ற பாரசீக மொழி பயணக்கட்டுரையை எழுதியதற்காகவும் இவர் அறியப்படுகிறார்.

மிர் லைக் அலி கான்
இறப்பு(1889-07-07)சூலை 7, 1889
பிள்ளைகள்மூன்றாம் சலார் ஜங்
ஐதராபாத் இராச்சியத்தின் திவான்
பதவியில்
1884–1887
ஆட்சியாளர்மக்பூப் அலி கான்
முன்னையவர்மிர் துராப் அலி கான், முதலாம் சலார் ஜங்
பின்னவர்நவாப் அஸ்மான் ஜா பகதூர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் மிர் துராப் அலி கான், முதலாம் சலார் ஜங்கின் மகனான இவர் நிசாம் கல்லூரியில் கல்வி கற்றார், பின்னர் 1882 இல் இங்கிலாந்தில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் படித்தார். 1883ல் ஐதராபாத் நிசாமிருந்து சலார் ஜங் என்ற பட்டத்தைப் பெற்றார்.[1]

ஐதராபாத்து மாநிலத்தின் பிரதமர்

தொகு

1884 இல், இருபத்தி இரண்டு வயதில், இரண்டாம் சலார் ஜங் ஐதராபாத்தின் திவானாக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலத்தில், ஐதராபாத் மாநிலத்தின் அலுவல் மொழியாக இருந்த பாரசீக மொழியை உருதுவுக்கு மாற்ற உத்தரவிட்டார். [2] பதவியில் இருந்த நிசாம் மக்பூப் அலி கானுடன் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்த போதிலும், பின்னர் இவர் அவருடைய ஆதரவை இழந்தார். பின்னர், ஏப்ரல் 1887 இல் பிரதமர் பதவியை விட்டு விலகினார்

பிற்கால வாழ்வு

தொகு

மே 1887 இல், இரண்டாம் சலார் ஜங் ஐரோப்பாவில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தை தொழிலதிபர் மோரேடன் பிரீவென் நிர்வகித்தார். இவரது பயணத்தின் முடிவில், விக்டோரியா மகாராணியால் இவருக்கு இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. வெளிநாட்டில் தனது அனுபவங்களை ' வாகயே-இ மொசாஃபெரட் ' என்ற தலைப்பில் பாரசீக மொழியில் பதிவு செய்தார். இந்தப் படைப்பு கடைசி இந்திய-பாரசீக பயணக் குறிப்புகளில் ஒன்றாகும்.

இறப்பு

தொகு

இரண்டாம் சலார் ஜங் தனது பயணத்திலிருந்து ஐதராபாத்து திரும்பிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 7 ஜூலை 1889 அன்று கல்லீரல் தொடர்பான நோயால் தனது 27 வயதிலேயே இறந்தார். இவரது மகன், மிர் யூசுப் அலி கான், மூன்றாம் சலார் ஜங் , ஜூன் 4, 1889 இல் பிறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Green, Nile (2018-10-30). The Antipodes of "Progress": A Journey to the End of Indo-Persian (in ஆங்கிலம்). Brill. pp. 216–251. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/9789004387287_010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-38728-7. S2CID 197855816.
  2. Rahman, Tariq (2008-09-10). Urdu in Hyderabad State. Department of Languages and Cultures of Asia, UW-Madison. pp. 36 & 46.
அரசு பதவிகள்
முன்னர் ஐதராபாத் இராச்சியத்தின் திவான்
1884–1887
பின்னர்
நவாப் அஸ்மான் ஜா பகதூர்