மிளகாய் வடை
மிளகாய் வடை என்பது மிளகாய் ( மிர்ச்சி ) மற்றும் உருளைக்கிழங்கு அல்லது காலிஃபிளவர் மசாலா பொதியப்பட்ட வடையை பொறித்து, தக்காளி சுவைச்சாறுடனோ (sauce) புதினா மற்றும் புளி சட்னியுடனோ சூடாக பரிமாறப்படும் ஒரு காரமான இந்திய சிற்றுண்டியாகும். மிளகாய் வடை தயாரிக்க வாழைக்காயும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகாய் வடை | |
மாற்றுப் பெயர்கள் | மிளகாய் பஜ்ஜி, மிளகாய் பாஜியா |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | இராஜஸ்தான் |
முக்கிய சேர்பொருட்கள் | மிளகாய், கடலை மாவு, உருளைக்கிழங்கு |
இராஜஸ்தான் ஜோத்பூர் மிளகாய் வடை மிகவும் பிரபலமானது, ஏனெனில் அப்பகுதியில் உள்ள தண்ணீர் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. இது மற்றொரு ஜோத்பூர் ஸ்பெஷாலிட்டியான மாவா கச்சோரியுடன் நன்றாக இணைகிறது, சர்க்கரை பாகில் தோய்த்து எடுக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A culinary trip to Rajasthan". தி இந்து. 26 July 2004. p. 02. Archived from the original on 25 January 2013 – via The Hindu (old).