மிளைவேள் தித்தன்

மிளைவேள் தித்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். சங்கநூல் தொகுப்பில் இவனது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 284.

உறந்தை அரசன் தித்தன் வேறு. மிளைவேள் தித்தன் வேறு.

  • மிளை = காவல்காடு
  • வேள் = வேளிர்குடி வள்ளல்

பாடல் சொல்லும் செய்தி தொகு

திருமணம் நிகழவிருக்கிறது. தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

அவன் நாடன். நாடன் அறவன் ஆயினும் அறநெறி அல்லாதவன் ஆயினும் இருந்துவிட்டுப் போகட்டும். அவனது சிறுகுடி நம்மை ஏசுமோ? அல்லது நம்மை நினைக்காதோ?

  • ஏசு = புகழ் (ஒப்புநோக்குக: 'கல்லேசு கவலை' - மலைபடுகடாம்)

அவன் நாடு

போரிட்ட யானையின் புகர்முகம் போலப் பெரும் பாறாங்கற்களில் பலாப்பழமும், காந்தள் பூக்களும் வீழ்ந்துகிடக்கும் நாடு அவன் நாடு.

சிறுகுடி

வரையில் அருவி கொட்டுவது போல சொற்களைக் கொட்டும் ஊர் அவன் சிறுகுடி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிளைவேள்_தித்தன்&oldid=1177180" இலிருந்து மீள்விக்கப்பட்டது