மிவாட்டி மாடு

மிவாட்டி மாடு (Mewati), அல்லது கோசி மாடு என அழைக்கப்படுவது, இந்தியாவில் உள்ள ஒரு நாட்டு மாட்டு இனமாகும். [1] இவை அரியானா மாநிலத்தில் உள்ள பிரதேசமான மிவாட்டியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த மாடுகள் கிர் மாடுகள் மற்றும் ஹர்யானி மாட்டினங்களுடன் தொடர்புடைய இனங்களாகும். இந்த மாடுகள் கிட்டத்தட்ட அனைத்துமே வெண்மை நிறத்தில் உள்ளன அரிதாக சிலமாடுகள் பழுப்பு நிழல்கள் கொண்டதாக இருக்கின்றன. இவை நல்ல பால் கறக்கும் திறன் மற்றும் உழைக்கும் திறன் பெற்றதால் இந்த இரண்டு பயன்பாட்டுகளுக்குமாக இவை வளர்க்கப்படுகின்றன. இந்த எருதுகள் வலிமை மற்றும் பொறுமைக்காக அறியப்படுகிறது. இவற்றை விவசாய மற்றும் மாட்டுவண்டி வேலைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். [2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Breeds of Livestock - Mewati Cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  2. "BREED IMPROVEMENT AND PRESERVATION". Department of Animal Husbandry & Dairying, Ministry of Agriculture, Government of India. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  3. "BIODIVERSITY OF INDIGENOUS CATTLE AND ITS UTILITY" (PDF). Archived from the original (PDF) on 19 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிவாட்டி_மாடு&oldid=3574995" இலிருந்து மீள்விக்கப்பட்டது