மீசையுடைய பறக்கும் அணில்
மீசையுடைய பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெட்டினோமிசு
|
இனம்: | பெ. ஜெனிபார்பிசு
|
இருசொற் பெயரீடு | |
பெட்டினோமிசு ஜெனிபார்பிசு கோர்சூபீல்டு, 1824) |
மீசையுடைய பறக்கும் அணில் (Whiskered flying squirrel)(பெட்டினோமிசு ஜெனிபார்பிசு) என்பது பறக்கும் அணில் சிற்றினமாகும்.[2] இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.
வாழிடம்
தொகுமீசையுடைய பறக்கும் அணில், தாழ்நில மற்றும் மலை முதன்மை காடுகள் மற்றும் முதிர்ந்த இரண்டாம் நிலை காடுகளில் அரிதாகவே காணப்படும். மேற்கு தீபகற்ப மலேசியாவில் இந்த சிற்றினம் சில சமயங்களில் பழத்தோட்டங்களில் காணப்படுகிறது. மேலும் வடக்கு போர்னியோவில் இது பீட் சதுப்பு காடுகளிலிருந்தும் அறியப்படுகிறது.
விளக்கம்
தொகுஇந்த அணிலின் முக்கிய தனித்துவமான அம்சம், கண்ணுக்குப் பின்னால் காணப்படும் சிறிய, அரிதான உரோமங்களாகும்.
இதன் உடல் ரோமங்கள் சிவப்பு-பழுப்பு நிறமாகவும். கீழ் முதுகு மற்றும் சாய்வுப் பகுதி 'தங்க-இளஞ்சிவப்பு' நிறமாகவும் இருக்கும். இதன் அடிப்பகுதி உரோமங்கள் சாம்பல் நிறத்தில் காணப்படும். மேலும் இதன் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதி உரோமங்கள் வெளிர் அல்லது மந்தமான ஆரஞ்சு-மெழுகு தோலுடன் காணப்படும். தோற்செட்டை அல்லது சறுக்கும் சவ்வு, வெள்ளை முனைகள் கொண்டது. இதன் வால் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Francis, C.; Gumal, M. (2008). "Petinomys genibarbis". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/16735/0. பார்த்த நாள்: 6 January 2009.
- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
- ↑ "Whiskered Flying Squirrel - Petinomys genibarbis". www.ecologyasia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-22.