மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

(மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) (Sri Meenakshi Government Arts College for Women) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் மதுரையில் செயல்பட்டுவரும் மகளிருக்கான அரசினர் கலைக் கல்லூரியாகும். 1965 ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது தன்னாட்சித் தகுதியுடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1][2] இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கற்றுத் தரப்படும் இக்கல்லூரியில் 2013ஆம் ஆண்டு நிலவரப்படி 4150 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
வகைஅரசு, மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1965
முதல்வர்சு. வானதி
நிருவாகப் பணியாளர்
150 (பேராசிரியர்கள்)
43 (அலுவலகப் பணியாளர்கள்)
மாணவர்கள்4150 (2013 ஆண்டு நிலவரப்படி)
அமைவிடம், ,
இணையதளம்http://smgacw.org/

வரலாறு

தொகு

மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 1965-ல், 20 ஏக்கர் பரப்பளவில் 320 மாணவிகள், 13 பேராசிரியர்கள், 13 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1998 அக்டோபர் 6 அன்று தன்னாட்சித் தகுதியைப் பெற்றது. இக்கல்லூரி தற்போது, 3639 மாணவர்கள், 150 பேராசிரியர்கள், 43 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.

வழங்கும் படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் தற்போது 13 இளநிலைப் பட்டப் படிப்புகளும், 12 முதுநிலைப் பட்டப் படிப்புகளும், 4 ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • புவியியல்
  • மனையியல்

முதுநிலைப் படிப்புகள்

தொகு
  • வரலாறு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • இயற்பியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு