மீனாட்சி கோபிநாத்
மீனாட்சி கோபிநாத் (Meenakshi Gopinath) ஓர் இந்தியக் கல்வியாளர், அரசியல் விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் புது தில்லி சீமாட்டி ஸ்ரீ ராம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆவார். [1] இவர் தெற்காசியாவின் பெண்கள் மத்தியில் அமைதி மற்றும் சமூக-அரசியல் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் ஓர் அரசு சாரா அமைப்பான பாதுகாப்பு மோதல் மேலாண்மை மற்றும் அமைதிக்கான (WISCOMP) பெண்களின் நிறுவனர் மற்றும் தற்போதைய இயக்குநராகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு எனும் இந்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றும் முதல் பெண்மணியும் ஆவார். [2] [1] இவர் லோக்பால் தேர்வுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார், இது இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அதிகார வரம்பைக் கொண்ட ஒரு சட்ட அமைப்பாகும். [3] இந்தியக் கல்வித் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2007 ஆம் ஆண்டில் பத்மசிறீ எனும் நான்காவது உயரிய குடிமை விருதை வழங்கியது. [4] பெண்ணிய சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய அரசியலின் முன்னணி இதழான இன்டர்நேஷனல் ஃபெமினிஸ்ட் ஜர்னல் ஆஃப் பாலிடிக்ஸ் இன் இணை ஆசிரியர் ஆவார். [5]
மீனாட்சி கோபிநாத் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | கல்வியாளர் |
அறியப்படுவது | கல்வி மற்றும் சமூக செயற்பாடு |
வாழ்க்கைத் துணை | ராஜீவ் மெகரோத்ரா |
விருதுகள் | பத்மசிறீ |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபுது தில்லியில் உள்ள சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பினைப் படித்தார்.[6]. அதே கல்வி நிறுவனத்தில் பல வருடங்கள் முதல்வராக இருந்தார். [7] மாசசூசெட்சு ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற இந்தியா திரும்பினார்.[8] ஃபுல்பிரைட் ஆய்வுதவித் தொகையினைப் பெற்று, பின்னர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் செய்தார்.[9] சவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். [10] மேலும் 1988 ஆம் ஆண்டு முதல்[1]2014 இல் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை சிறீராம் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார்.[1]
விருதுகளும் கௌரவங்களும்
தொகு2007 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் கோபிநாத்துக்கு நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4] கல்வியில் சிறந்து விளங்கியதற்காக, அதே ஆண்டு, கிம்ப்ரோ பிளாட்டினம் இசுடாண்டர்டு விருது பெற்றார். [11] 2008இல் சமூக நல்லிணக்கத்திற்கான 2008 செலிபிரேட்டிங் வுமன்ஹுட் தெற்காசிய பிராந்திய அங்கீகாரத்தை இவருக்கு வழங்கியது.[12] கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ராஜீவ் காந்தி விருது மற்றும் மகிளா சிரோமணி விருது மற்றும் டெல்லி சிட்டிசன் ஃபோரம் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Dr Meenakshi Gopinath on Aberystwyth University" (PDF). Aberystwyth University. 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ "Our Story". Women in Security Conflict Management and Peace. 2016. Archived from the original on 9 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Fali Nariman refuses to join 'farcical' Lokpal selection panel". First Post. 27 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ 4.0 4.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
- ↑ "Home". பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
- ↑ "India's Best Arts Colleges 2014". India Today. 2016. Archived from the original on 7 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Legend Lives On- the Retirement of Meenakshi Gopinath". DU Beat. 31 August 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ Gopinath, Meenaskshi. "Political development, the People's Party of Pakistan and the elections of 1970.", University of Massachusetts Amherst Masters Theses 1911 - February 2014, 2641, 1973. Retrieved 23 June 2019.
- ↑ "Meenakshi Gopinath on Vedica Scholars". Vedica Scholars. 2016. Archived from the original on 18 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "An interview with Arshiya Sethi". Jawaharlal Nehru University. 2008. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ "Winners - Platinum". Qimpro Foundation. 2016. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
- ↑ "Celebrating Womanhood South Asian Region Recognition 2008'". Celebrating Womanhood.org. 2008. Archived from the original on 13 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Dr. Meenakshi Gopinath Principal, Lady Shri Ram College Delhi retire from services". Asianet (TV channel). 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.