மீனாட்சி சபாபதி
மீனாட்சி சபாபதி (பிறப்பு: மார்ச் 2,1963) சிங்கப்பூரில் பிறந்த இவர் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியின் தமிழ்ப் பிரிவிலும், பின்பு ஆங்கிலப் பிரிவிலும் கல்வி கற்றார். பின்னர் செயிண்ட் அண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியிலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் கற்று பி.எஸ்.சி. பட்டத்தினைப் பெற்றார். தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வழி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். நன்யாங் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு கல்வித் துறையில் பட்டத்துக்குப் பிந்திய பட்டயம் பெற்றுள்ளார். (Post graduate diploma in Education)
தொழில் நடவடிக்கை
தொகுஒலி 96.8ல் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இலக்கியப் பணி
தொகு1982ல் எழுத்துப் பயணத்தில் காலடியெடுத்து வைத்த இவரின் முதல் படைப்பு 1983ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையின் செய்தி இதழான சுடரில் ‘பொறாமையும் போட்டித் தன்மையும்’ எனும் தலைப்பில் வெளிவந்தது. இவர் கட்டுரைத் துறையிலேயே அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றார்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- Simple Tamil
- அறிவோமா நாம்
- நமது பண்பாட்டை அறிவோமா நாம்
வகித்த பதவிகள்
தொகுசிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை, சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றம், டக்ஸ்ட்டன் பிளேய்ன் சமூக நிலைய இந்திய நற்பணிச் செயற்குழு, இந்திய நூலக ஆலோசனைக் குழு, செம்பவாங் தமிழர் சங்கம் போன்றவற்றில் பதவி வகித்துள்ளார்.
உசாத்துணை
தொகு- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு