மீனாட்சி சிரோத்கர்

இந்திய நடிகை

மீனாட்சி சிரோத்கர் (Meenakshi Shirodkar) (11 அக்டோபர் 1916 - 3 ஜூன் 1997) ஓர் இந்திய நடிகையாவார். முக்கியமாக மராத்தி திரைப்படங்களிலும், மராத்தி நாடகங்களிலும், தொலைக்காட்சியிலும் இவர் பணியாற்றினார். 1938இல் திரையுலகில் அறிமுகமாகி 1970களின் ஆரம்பம் வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். மாஸ்டர் விநாயக்குடன் பிரம்மச்சாரி (1938) என்ற மராத்தி படத்தில் நீச்சலுடையில் இவர் தோன்றியது பாரம்பரிய பார்வையாளர்களை திகைக்க வைத்தது. இவர் இரண்டு பாலிவுட் நடிகைகளான, நம்ரதா சிரோத்கர், சில்பா சிரோத்கர் ஆகியோரின் பாட்டியாவார்.

மீனாட்சி சிரோத்கர்
Meenakshi Shirodkar
Meenakshi Shirodkar wearing swimsuit in Bramhachari (1938)
பிரம்மச்சாரி படத்தில் மீனாட்சி (1938)
பிறப்புஇரத்தன் பெட்னேகர்
(1916-10-11)11 அக்டோபர் 1916
இறப்பு3 சூன் 1997(1997-06-03) (அகவை 80)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகை
அறியப்படுவதுபிரம்மச்சாரி
உறவினர்கள்நம்ரதா சிரோத்கர், சில்பா சிரோத்கர் (பேத்திகள்)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மீனாட்சி அக்டோபர் 11, 1916 அன்று ஒரு மராத்தியக் குடும்பத்தில் இரத்தன் பெட்னேகராக பிறந்தார். சிறுவயதிலேயே இந்திய பாரம்பரிய இசையைக் கற்கத் தொடங்கினார். 1936ஆம் ஆண்டில், மருத்துவர் சிரோத்கரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். இவரது பேத்திகள் பாலிவுட் நடிகைகளான நம்ரதா சிரோத்கரும் சில்பா சிரோத்கரும் திரைப்படத் துறையிலும் பணியாற்றியுள்ளனர்.[1] நம்ரதா 1993இல் மிஸ் இந்தியாவாக பட்டம் சூட்டப்பட்டார்.[2]

இறப்பு

தொகு

4 ஜூன் 1997 அன்று, மீனாட்சி சிரோத்கர் தனது 80 வயதில் மும்பையில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "No full stops". தி இந்து. 11 Dec 2004. Archived from the original on 16 February 2013. பார்க்கப்பட்ட நாள் 15 January 2013.
  2. "Miss India Winners 2010-1964". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 5 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Veteran Marathi actress dead". இந்தியன் எக்சுபிரசு. 4 June 1997 இம் மூலத்தில் இருந்து 30 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121230015903/http://www.expressindia.com/ie/daily/19970604/15550853.html. பார்த்த நாள்: 15 January 2013. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_சிரோத்கர்&oldid=3946611" இலிருந்து மீள்விக்கப்பட்டது