மீனாட்சி சுந்தர பாண்டியன்

மீனாட்சி சுந்தர பாண்டியன் என்பவன் வம்சாவளி கூறும் பாண்டியர் இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் தொன்பியல் பாண்டியர்களுள் ஒருவன். இவன் மதுரை தலைநகரமாகும் முன் கல்யாணபுரம் என்னும் ஊரை தலைநகராக வைத்து ஆண்டவன் என்று புராணங்களில் கூறப்படுகிறான். இவனே மூன்றாவது பாண்டிய மன்னனாகவும் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணங்களில் அறியப்படுகிறான்.[1] இவன் மலையத்துவச பாண்டியன் என்பவனின் மகளான தடாதகையை திருமணம் செய்தவன். இவர்களையடுத்து இவர்களின் மகனான உக்கிர குமார பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்ததாக புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த தடாதகை நினைவாகவே மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டதென்பது இந்துக்களின் நம்பிக்கை.

மேற்கோள்கள்

தொகு