தொன்மவியல் பாண்டியர்
(தொன்பியல் பாண்டியர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொன்மங்களான காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வம்ச வர்ணனை கூறும் செப்பேடுகள் மற்றும் பல இலக்கியங்களில் சில பாண்டிய மன்னர்களில் பெயர்கள் இடம்பெறுகின்றன. சில தொன்மங்களில் பெயர் கூறாமல் பாண்டியர்கள் என்று மட்டும் கூறப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பற்றி சரித்திர சான்றுகள் கிடையாது.
பாண்டியர் பற்றிய தொன்மங்கள்
தொகு- சின்னமனூர் மற்றும் வேள்விக்குடி செப்பேடுகள்.
- தமிழ் இலக்கியமான இறையனார் அகப்பொருள். - 6 பாண்டியர்கள்.
- புராணங்களான கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மதுரை புராணம்.[1]
- இதிகாசங்களான மகாபாரதம் 3 பாண்டியர்களையும், இராமாயணம் ஒரு பாண்டியனையும் குறிப்பிடுகிறது.
- நற்குடி வேளாளர் வரலாறு என்னும் நூல். - 201 பாண்டியர்கள்
- குலசேகர ராசா கதை.
- இலக்கியங்களான கலிங்கத்துப்பரணி மற்றும் சங்க இலக்கியங்கள் மற்றும் பல.
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ "The Madras journal of literature and science, Volume 6". By Madras Literary Society and Auxiliary of the Royal Asiatic Society, Royal Asiatic Society of Great Britain and Ireland. pp. பப 211-215. பார்க்கப்பட்ட நாள் சூலை 28, 2012.