குலசேகர ராசா கதை

குலசேகர ராசா கதை அல்லது பஞ்ச பாண்டியர் கதை அல்லது ஐவர் ராசாக்கள் கதை என்பது தமிழகத்தில் கூறப்படும் தொன்மவியல் பாண்டியர் கதைகளுள் ஒன்று.

இதன்படி சந்திர வம்சத்தை சேர்ந்த குலசேகர பாண்டியன் மற்றும் அவனது 4 தம்பிகள் சேர்ந்து மதுரை மற்றும் தென்பாண்டி சீமை போன்ற பகுதிகளை ஆள்கின்றனர். குலசேகரனின் ஒவியத்தை வரைந்தவர்கள் அதை வடுக நாட்டிற்குக் கொண்டு செல்ல அதைப் பார்த்த வடுக இளவரசி குலசேகரன் மீது காதல் கொள்கிறாள். அவளை திருமணம் முடிக்க அந்நாட்டின் மன்னன் குலசேகர பாண்டியனுக்குத் தூது அனுப்புகிறான். "நான் சந்திர வம்சத்தவரையே" மணப்பேன் என்று மறுமொழி கூற இரு நாட்டுக்கும் போர் மூழ்கிறது. அதில் குலசேகரனின் 4 தம்பிகளையும் கொன்று குலசேகரனை பிணைக்கைதியாக வடுக இளவரசிக்கு மணமுடிக்க வடுக அரசன் முயல்கிறான. பிணைக் கைதியாக இருந்த குலசேகர ராசா நஞ்சுண்டு தற்கொலை செய்து கொள்கிறார். தன்னால் தான் இந்த கதி அவருக்கு நேர்ந்தது என எண்ணி வடுக இளவரசி உடன்கட்டை ஏறுகிறாள்.

தாக்கம்

தொகு

இக்கதை இன்றும் சமுதாயத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அவை,

  1. தமிழ்நாட்டில் பஞ்ச பாண்டியர் கோவில்கள் எழும்ப காரணமானது.
  2. இந்த நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டு, நாடகம் போன்ற துறைகளில் இன்றும் இருக்கிறது.
  3. இது பல்வேறு கிளைக்கதைகள் உருவாக காரணமாய் இருந்தது.
  4. வடுகச்சி மதில் என்ற இடத்தில் வடுக இளவரசி உடன்கட்டை ஏறிய குணத்தைக் கண்டு அவளுக்கு சடங்குகள் நடக்கின்றன. ஆனால் இந்த இடம் வேறு என்ற கருத்தும் உள்ளன.
  5. இதில் வரும் 5 பாண்டியர்களும் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மற்றும் அவரது சகோதரர்கள் என்று சிலரும் தென்காசிப் பாண்டியர்கள் என்றும் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலசேகர_ராசா_கதை&oldid=1303310" இலிருந்து மீள்விக்கப்பட்டது