மீனாட்சி மிஷன் மருத்துவமனை
மீனாட்சி மிஷன் மருத்துவமனை (ஆங்கில மொழி: Meenakshi Mission Hospital) மதுரையை மையமாகக் கொண்ட தனியார் மருத்துவமனையாகும். இது 1990 ஆம் ஆண்டு மருத்துவர் ந. சேதுராமனால் தொடங்கப்பட்டதாகும்.[1] 1000 படுக்கை வசதிகளுடன் இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை உட்பட 42 சிறப்புத் துறைகளைக் கொண்டது.[2][3]
அமைவிடம் | மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
---|---|
நிறுவல் | 1990 |
வலைத்தளம் | மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் |
பட்டியல்கள் |
வரலாறு
தொகுமூவேந்தர் முன்னணிக் கழகம் என்ற கட்சித் தலைவரும் சிறுநீரக மருத்துவருமான ந. சேதுராமன் என்பரால் 1985 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் எஸ்.ஆர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.[3] அந்த அறக்கட்டளையின் கீழ் 1990 ஆம் ஆண்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக திருமதி ராஜம் சேதுராமன் 1985 முதல் 2021 வரை பொறுப்பிலிருந்தார்.[4] 1991 இல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாறியது.[1] 2005 இல் இதன் துணைத் தலைவராக மரு. குருசங்கர் பெறுப்பேற்றார். 2020 காலக்கட்டத்தில் 330 மருத்துவர்களுடன் 350 கோடி மதிப்புள்ள மருத்துவமனையாக வளர்ந்துள்ளது.[1]
2019 இல் தானியங்கி அறுவை சிகிச்சை வசதியையும் 2021 மே மாதம் இந்தியாவில் முதன்முறையாக தொலை மருத்துவ தானியங்கிகளை அறிமுகம் செய்தது.[5][6]
தொண்டுப் பணிகள்
தொகுஅண்ணப் பிளவு சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை என ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.[7][2] இரத்ததான மூகாம், இலவச கண் மருத்துவ முகாம் என மருத்துவ சேவைகளை வணிக நோக்கின்றியும் செய்கின்றனர்.[8]
தஞ்சாவூர் மருத்துவமனை
தொகுமதுரையில் செயலபட்டுவரும் இந்நிறுவனம், தனது கிளை நிறுவனத்தினை தஞ்சாவூரில் நிறுவியது. தஞ்சாவூர் மீனாட்சி மிசன் மருத்துவமனைக்கு 2010இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மருத்துவமனை, 2013ல் பயன்பாட்டிற்கு வந்தது. 250 படுக்கை வசதியுடன், அறுவைச் சிகிச்சை வசதிகள் என முக்கியமான 19 துறைகளில் இப்பகுதி மக்களின் மருத்துவத் தேவையினைப் இந்த மருத்துவமனை பூர்த்திச் செய்கிறது.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Guts and glory — how Dr Gurushankar turned a small hospital into a Rs 350cr empire". யுவர் ஸ்டோரி. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ 2.0 2.1 "மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள்". தினத்தந்தி. 2015 அக்டோபர் 21. http://srtrust.org.in/images/charity_news%20_letter_dec_2015_final.pdf. பார்த்த நாள்: 20 June 2021.
- ↑ 3.0 3.1 "OUR STORY". எஸ்.ஆர். அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "ராஜம் சேதுராமன்". மீனாட்சி மிஷன் மருத்துவமனி. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "தென் தமிழகத்தில் முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடக்கம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/05030633/The-first-time-in-South-TamilnaduRobotic-surgery-facility.vpf. பார்த்த நாள்: 20 June 2021.
- ↑ "இந்தியாவிலேயே முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டெலிமெடிசின் ரோபோக்கள் அறிமுகம்". https://www.polimernews.com/dnews/142521/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D. பார்த்த நாள்: 20 June 2021.
- ↑ "தொண்டுப் பணி". மீனாட்சி மிஷன் மருத்துவமனை. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "4 ஊர்களில் இன்று இலவச கண் மருத்துவ முகாம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "About the hospital". meenakshihospital.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
- ↑ Mallady, Shastry V. (2011-07-11). "250-bed hospital to come up in Thanjavur by April". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.