மீனு தாக்கூர்
மீனு தாக்கூர் (Meenu Thakur), (பிறப்பு ஜூலை 1, 1972) ஒரு இந்திய குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். புது தில்லியில் இளம் வயதினருக்கு குச்சிபுடி நடனத்தை கற்பிப்பதற்காக 'சுரம்யா' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மீனு தாக்கூர் 'யங் இந்தியா' என்ற மாதாந்திர நடப்பு விவகார இதழின் கலாச்சார கட்டுரையாளராகவும் உள்ளார். நொய்டா, என்.சி.ஆர், மற்றும் கொல்கத்தாவின் சகோதரி மார்கரெட் அறக்கட்டளை, ஆசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராவார்.[1]
மீனு தாக்கூர் | |
---|---|
பிறப்பு | 1 சூலை 1972 (அகவை 52) |
குடும்பம்
தொகுஇவர், உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சகாரன்பூரில் ஒரு வழக்கறிஞராக இருந்த ஹர்ஸ்ரூப் தாக்கூர் மற்றும் இல்லத்தரசி சகுந்தலா ஆகியோருக்கு 1972 ஆம் ஆண்டில் மகளாகப் பிறந்தார்.
சுயசரிதை
தொகுகுச்சிபுடியில் தகுதி பெற்றதைத் தவிர, மீனு தில்லியிலுள்ள தி கதக் கேந்திராவில் கதக் நடனத்தைக் கற்றுக்கொண்டார். மீனு ஏராளமான குச்சிபுடி நடன நிகழ்ச்சிகளை செய்துள்ளார் மற்றும் கடந்த 27 ஆண்டுகளாக குச்சிபுடி நடனக் கலைஞராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
மீனு இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பு, இந்திய விழா, கலாச்சார அமைச்சகம் ஆகியவற்றின் நிறுவப்பட்ட கலைஞராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் இந்தியாவுக்கு வெளியே நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தூர்தர்ஷனின் (இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி நிறுவனம்) ஒரு 'ஏ' தரக் கலைஞர் ஆவார். மேலும் இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சமூகம் என்ற தலைப்பில் பட்டறைகள் / செயல்திறன்களை மேற்கொள்கிறார்.
சிறைச்சாலையில் நடன நிகழ்ச்சியை (திகார் சிறை, 2014) நிகழ்த்திய முதல் நடனக் கலைஞர் என்ற சாதனையையும், புதுதில்லி (2018) மண்டோலி மத்திய சிறையில் ஒரு நடன நிகழ்ச்சியை செய்தவர் என்ற சாதனையையும் மீனு வைத்திருக்கிறார்.
குச்சிபுடி நடனத்தில் சிம்கானந்தினியை நிகழ்த்தக்கூடிய ஒரு சில நடனக் கலைஞர்களில் மீனு ஒருவர் ஆவார். அதில் நடனக் கலைஞர் சிம்மவாகனத்தை (துர்கா தேவியின் வாகனம்) தனது கால்களால் வரைகிறார்.
இந்திய விழாக்களில் நிகழ்ச்சிகள்
தொகுகஜுராஹோ விழா, கல் கி காலக்கர் விழா, சிதம்பரம் (தமிழ்நாடு), நாட்டியாஞ்சலி விழா, கோனார்க் விழா, ஹொரைசன் (ஐ.சி.சி.ஆர்) டெல்லி & லக்னோ, சித்தேந்தர் ஜயந்தி சமரோ (ஐதராபாத்), பண்டிட். பட் ஸ்மிருதி சமரோ (ஜெய்ப்பூர்), கலாக்ஷேத்ரா, சென்னை (தமிழ்நாடு), மகாபலிபுரம் திருவிழா (தமிழ்நாடு), சுர் சிங்கர் சம்சாத் (மும்பை), நிமாத் விழா (எம்.பி.), தியாகராஜா விழா, தில்லி சர்வதேச கலை விழா (டெல்லி), செம்மொழி நடனம் மற்றும் இசை திருவிழா (கோவா), ஹம்பி மஹோத்ஸவா (ஹம்பி), மோத்தேரா நடன விழா (சூரிய கோயில், மெஹசானா, குஜராத்) தாஜ் மஹோத்ஸவா (ஆக்ரா) போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். [2]
இந்தியாவுக்கு வெளியே நிகழ்ச்சிகள்
தொகுபஹ்ரைன், இங்கிலாந்து, பிரேசில், செர்பியா, குரோஷியா, தென்னாப்பிரிக்கா, மறு ஒன்றியம், சாம்பியா, எல்-சால்வடோர், பனாமா, மொரீஷியஸ், நேபாளம், சீனா, ஜப்பான், கனடா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, பூட்டான், ஆஸ்திரியா, துனிசியா மற்றும் ஹங்கேரி போன்ற வெளிநாடுகளில் நடன நிகசழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார்.
தயாரிப்புகள்
தொகுஇவர், பின்வரும் தலைப்பிட்ட நடன நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார். திரிலோகரக்சினி (2014)
இந்தியில் பாமகலபம் (2015)
சமர்பன்-மீராபாயின் சாகா (2016)
யசோதரா-ஒரு முனிவரின் ராணி (2017)
நவகிரக சரிதம்-கிரகங்களின் சக்தி (2017)
சுரம்யா
தொகுசுரம்யா என்பது, குச்சிபுடி நடனத்தை பிரபலப்படுத்துவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி நிறுவனம் ஆகும். இது, 1999 இல் நிறுவப்பட்டது. இது புதுதில்லியில் குச்சிபுடி நடனத்தில் வகுப்புகளை நடத்துகிறது. சுரம்யாவின் நிறுவனர் மற்றும் இயக்குநராக மீனு தாக்கூர் உள்ளார். சுரம்யாவின் மாணவர்கள் (மீனு தாக்கரின் சீடர்கள்) அவரது வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு தேசிய விழாக்கள் / நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் குச்சிபுடி நடனத்தை கற்கவும், வெளிநாட்டு மாணவர்களை அழைக்கவும், சுரம்யா இந்திய கலாச்சார உறவுகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ PTI. "Sandeep Marwah Awarded With Honorary Doctorate From Kings". BW Businessworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-19.
- ↑ http://kuchipudikalakar.blogspot.com/2013/02/meenu-thakur.html