மீன்பிடி கரை

கடலின் ஒரு பகுதி அதன் சுற்றியுள்ள பகுதியுடன் ஒப்பிடும்போது ஆழமற்றது

கரைத்தட்டு, சில நேரங்களில் மீன்பிடி கரை, என்பது கடலில் சுற்றியுள்ளப் பகுதியை விட ஆழம் குறைவான பகுதியாகும். இங்கு காற்று மற்றும் அலை மாற்றங்களால் சத்துமிக்க குளிர்ந்த நீர் அமைகிறது. இக்காரணத்தினால் இவை மீன்வளம் மிக்கதாக விளங்குகிறது. மிகப்பெரும் கரைத்தட்டுகளான டாக்கர் கரைத்தட்டு, நியூபௌண்ட்லாந்தின் கிராண்ட் கரைத்தட்டுக்கள் உலகின் மிகவும் வளமான மீன்பிடிக் களங்களாக உள்ளன.

மைனே வளைகுடாவில் உள்ள ஜார்ஜெஸ் கரைத்தட்டு கடற்றரையில் மிக உயர்ந்த பரப்பாகும். இதனை படத்தில் இளநீலப் பகுதியாக கீழ் நடுவில் காணலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சில கடல் மாலுமிகள் வாச்செட் ரீஃப் போன்ற கரைத்தட்டுக்களை குறிபிட்டுள்ளனர்; இவற்றின் உண்மைத்தன்மை குறித்த தெளிவு இல்லை.

முக்கியமான கரைத்தட்டுகள் தொகு

உலகின் பெரிய கரைத்தட்டுக்களாவன:

  1. நியூ பௌண்ட்லாந்தின் பெரும் கரைத்தட்டுக்கள் (280,000 கிமீ²)[1]
  2. கிரேட் பகாமா கரைத்தட்டு (95,798.12 கிமீ², தீவுகளுடன் உள்ளது, தீவுகளின் பரப்பை சேர்க்காது)
  3. சாயா டெ மல்கா (35,000 கிமீ², வடக்கு கரைத்தட்டை நீக்கி, குறைந்த ஆழம் 7 மீ)
  4. சீசெல்சு கரைத்தட்டு (31,000 கிமீ², 266 கிமீ² தீவுப் பரப்புகளையும் சேர்த்து)
  5. ஜார்ஜெஸ் கரைத்தட்டு (28,800 கிமீ²)
  6. லாண்ட்ஸ்டௌன் கரைத்தட்டு (21,000 கிமீ², நியூ கலிடோனியாவின் மேற்கே, குறைந்தளவு ஆழம் 3.7 மீ)
  7. டாக்கர் கரைத்தட்டு (17,600 கிமீ², குறைந்தளவு ஆழம் 13 மீ)
  8. லிட்டில் பகாமா கரைத்தட்டு (14,260.64 கிமீ², தீவுகள் உள்ளன, பரப்பு தீவுகளை சேர்க்காது)
  9. கிரேட் சாகோசு கரைத்தட்டு (12,642 கிமீ², 4.5 கிமீ² தீவுப் பரப்பைச் சேர்த்து)
  10. ரீட் கரைத்தட்டு, இசுபார்ட்லி தீவுகள் (8,866 கிமீ², குறைந்த ஆழம் 9 மீ)
  11. கைகோசு கரைத்தட்டு, கைகோசுத் தீவுகள் (7,680 கிமீ², 589.5 கிமீ² தீவுப்பரப்பைச் சேர்த்து)
  12. மாக்லெசுபீல்டு கரைத்தட்டு (6,448 கமீ², குறைந்த ஆழம் 9.2 மீ)
  13. வடக்கு கரைத்தட்டு அல்லது ரிச்சி கரைத்தட்டு (5,800 கிமீ², சாயா டெ மல்காவின் வடக்கே, குறைந்த ஆழம் <10 மீ)
  14. கே சால் கரைத்தட்டு (5,226.73 கிமீ², 14.87 கிமீ² பரப்பளவு தீவுகளை சேர்த்து)
  15. ரோசலின்ட் கரைத்தட்டு (4,500 கிமீ², குறைந்த ஆழம் 7.3 மீ)

சான்றுகோள்கள் தொகு

  1. Fisheries and Oceans Canada Backgrounder: The Grand Banks and the Flemish Cap. Retrieved on: October 11, 2008.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்பிடி_கரை&oldid=3255027" இலிருந்து மீள்விக்கப்பட்டது