முஃதசிலா
முஃதசிலா என்பது ஒரு இசுலாமிய மெய்யியற் பள்ளி. இது கிபி 8 - 10 வரை பக்தாத்தில் செல்வாக்குப் பெற்றி இருந்தது. இசுலாமியக் கொள்கைகளைப் பகுத்தறிவு அடிப்படையில் ஆய முற்பட்டது. பகுத்தறிவால் இறையை அறியலாம், எது நல்லது எது கெட்டது என்று கூறலாம் என்று முஃதசிலாக்கள் கூறினார்கள்.
மேலும் இவர்கள் ஒன்றே இறை, தன்விருப்புக் கொள்கை, நியாமான கடவுள் போன்ற கொள்கைகளுக்கு முஃதசிலா சார்பான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள்.