முகநூல் வசதிகள்
சமூக வலையமைப்பான முகநூலில் உள்ள வசதிகளே முகநூல் வசதிகள் (Facebook Features) ஆகும். இக்கட்டுரையில் முகநூல் இணையத்தளத்தில் உள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன.
பொது
தொகுஅரட்டை
தொகு2008ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் திகதி முகநூல் அரட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.[1] 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 23இலிருந்து அனைத்து முகநூல் பயனர்களும் முகநூல் அரட்டையைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. முகநூல் அரட்டை மூலமாகப் பயனர்கள் ஒருவருடன் தனியாகவோ அல்லது பலருடன் குழுவாகவோ அரட்டை அடிக்க முடியும்.[2]
யாகூ! மெசஞ்சர், இசுகைப், ஏ. ஓ. எல். இன்ஸ்டன்ட் மெசஞ்சர், ஈபடி, ஃப்ளோக், மிராண்டா இன்ஸ்டன்ட் மெசஞ்சர், டிரில்லியன், எம்பதி, பிட்கின், அடியம், நிம்பஸ், போரேப்ரோன்ட் ஐடெண்டிடி மனேஜர், பால்ரிங்கோ, மீபோ, டோக்பாக்ஸ், விண்டோசு லைவ் மெசஞ்சர் முதலிய மென்பொருள்களும் முகநூல் அரட்டையைக் கொண்டுள்ளன. முகநூல் அரட்டையை ஐபோன், பிளாக்பெர்ரி என்பனவற்றிலும் பெற முடியும்.
2011 ஆகத்திலிருந்து ஒளித்தோற்ற அரட்டையையும் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.[3] ஆனாலும் அதற்காக நீட்சியொன்றை நிறுவ வேண்டும்.
பற்றுக்கள்
தொகுமுகநூல் பற்று என்பது முகநூலில் மெய்நிகர் பரிசுகளை வாங்குவதற்கும் ஆட்டங்களிலும் செயலிகளிலும் மெய்நிகர் பொருள்களை வாங்குவதற்கும் உதவும் மெய்நிகர் பணம் ஆகும்.[4] முகநூல் பற்றுக்களை பார்ண் படி, ஹேப்பி அகுவரியம், ஹேப்பி ஐலேண்ட், ஜூ பாரடைஸ், ஹலோ சிட்டி, மாஃபியா வார்ஸ், இட் கேர்ல் முதலிய ஆட்டங்களில் பயன்படுத்த முடியும்.
நண்பர்
தொகுநண்பர் சேர்த்தல் என்பது முகநூலில் உள்ள ஒருவருக்கு நட்புக்கோரிக்கையை அனுப்புவதாகும்.[5] நட்புக்கோரிக்கையைப் பெற்றவர் அதனை ஏற்றுக் கொண்டால் இருவரும் நண்பர்களாவர்.