முகமது முனாவ்வர்
முகமது முனாவ்வர் (Dr. mohamed munavvar) திவேஹி தீவில் உள்ள மீடோவில் பிறந்தார். இவர் மாலத்தீவின் முன்னாள் வழக்கறிஞராக இருந்தார்.
முகமது முனாவ்வர் உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பன்னாட்டுச் சட்டவியலில் சிறப்புத் தகுதியுடன் முதுகலைப் பட்டத்தைப் (மேதகைமை) பெற்றவர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
தொகுமுனைவர் முனாவ்வர் 2003 வரை பத்து ஆண்டுகளாக மாலத்தீவின் பொது வழக்கறிஞராக பணியாற்றினார்.[1][2]
இவர் ஒரு பதின்ம ஆண்டு காலம் ஆடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். கறுப்பு வெள்ளி என்றழைக்கப்படும் ஜனநாயக சார்பு கிளர்ச்சியில் பங்கேற்றார். இதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு 2004 ஆகஸ்ட் 13 அன்று இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[1] 5 டிசம்பர் 2004 அன்று, மாலத்தீவின் தண்டனைச் சட்டத்தின் 29 வது பிரிவின் கீழ் "அரசுக்கு எதிரான சட்டங்கள்" - இன்படி குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டிற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் முதல் பதினைந்து ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு சிறைவாசம் அல்லது நாடுகடத்துதல் தண்டனை ஆகும். எதிர்க்கட்சியும் சர்வதேச சமூகமும் முனாவ்வரின் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று சாடியதன் காரணமாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அவரின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
முன்னதாக மாலத்தீவில் அரசியல் கட்சிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் கயூமின் அரசாங்கத்தின் அரசியல் அதிருப்தியாளர்கள் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை உருவாக்கினர். முனாவ்வர் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். 2 ஜூன் 2007 அன்று டாக்டர் முனாவ்வர் மாலத்தீவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்,13 ஆகஸ்ட் 2008 அன்று டாக்டர் முனாவ்வர் அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Crackdown in the Maldives", Daily Star, 17 August 2004, retrieved 2011-08-08
- ↑ "Maldives president sacks reformists after starting sixth term பரணிடப்பட்டது 2012-10-19 at the வந்தவழி இயந்திரம்", Malaysia Star, 12 November 2003, retrieved 2011-08-08