முகமது வலியுல்லா
இந்திய அரசியல்வாதி
முகமது வலியுல்லா (Mohamed Valiulla) அல்லது (M Valiulla) (1899 - 19 டிசம்பர் 1960) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 1948 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை மைசூர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். 1950 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை மைசூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1952 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை மற்றும் 1958 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை மாநிலங்களவை ( இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை) உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். [1] [2] [3] [4] [5]
முகமது வலியுல்லா | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1899 |
இறப்பு | 19-திசெம்பர்-1960 (வயது 60-61) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கபீபு நிசா பேகம் |
பெற்றோர் | முகமது இப்ராகிம் சாகேப் (தந்தை) |
கல்வி | பி.ஏ., எல்.எல்.பி., |
பதவி வகித்தது
தொகு# | இருந்து | செய்ய | பதவி |
---|---|---|---|
1 | 1948 | 1950 | மைசூர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் |
2 | 1950 | 1952 | மைசூர் சட்டமன்ற உறுப்பினர் |
3 | 1952 | 1958 | நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை |
4 | 1958 | 1960 | நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kumar, Ravindra (1991). The Selected Works of Maulana Abul Kalam Azad: 1955-1956. Atlantic Publishers & Dist.
- ↑ The Indian Trade Journal. 1957.
- ↑ Sabha, India Parliament Lok (1956). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.
- ↑ Member_Biographical_Book.pdf. https://cms.rajyasabha.nic.in/UploadedFiles/ElectronicPublications/Member_Biographical_Book.pdf.
- ↑ Dept, Mysore (India : State) Information (1956). Mysore Information.