முகம்மது அனாசு

இந்திய ஓட்டப்பந்துவீரர் முகமது அனாசு யாகியா

முகம்மது அனாசு யாகியா (Mohammad Anas Yahiya) ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீரராவார். 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் பிறந்த முகம்மது அனாசு 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியிலும் 400 மீட்டர் ஓட்டபோட்டியிலும் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.

முகம்மது அனாசு
Mohammad Anas
தனித் தகவல்கள்
பிறந்த நாள்17 செப்டம்பர் 1994 (1994-09-17) (அகவை 30)
பிறந்த இடம்நிலமெல், கேரளா, இந்தியா
உயரம்1.77 m (5 அடி 9+12 அங்)
எடை69 கிலோகிராம்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை400m: 45.40s (பைடுகோசிக்சு 2016)

2016 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் போலந்து நாட்டில் நடைபெற்ற போலந்து தடகளச் சாம்பியன் போட்டியில், இவர் 400 மீட்டர் தூரத்தை 45.40 வினாடிகளில் ஓடிமுடித்து ஒரு தேசிய சாதனையை நிகழ்த்தினார். இவ்வேகமே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதியான வேகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது [1]. மில்காசிங் (1956,1960), கே.எம்.பினு (2004) ஆகியோருக்கு அடுத்ததாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது இந்தியத் தடகளவீரர் என்ற பெருமை முகம்மது அனாசுக்கு கிடைத்தது.[2].

2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களுரு நகரில் நடைபெற்ற தேசிய தடகளச் சாம்பியன் போட்டியில், 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் முகம்மது அனாசு இடம்பெற்றிருந்த குழு வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றது. முகம்மது அனாசடன் குங்கு முகம்மது, அய்யாசாமி தரூண் மற்றும் ஆரோக்கிய இராசீவ் கொண்ட நால்வர் அணி, முன்னதாக நான்கு வாரங்களுக்கு முன் துருக்கியில் நிகழ்த்தியிருந்த அவர்களின் 3:02.17 சாதனையை 3:00:91 நிமிடத்தில் ஓடிமுடித்து ஒரு தேசிய சாதனையைப் படைத்தது. மேம்பட்ட இச்செயல்திறன் குங்கு முகம்மது நால்வர் அணியை உலகத்தரவரிசையில் 13 ஆவது இடத்திற்கு உயர்த்தியது [3]

மேற்கோள்கள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அனாசு&oldid=2720722" இலிருந்து மீள்விக்கப்பட்டது