முகம்மது அமீது அலி

பாக்கித்தானிய அரசியல்வாதிகள்

முகம்மது அமீது அலி (Muhammad Hamid Ali) கிழக்கு பாக்கித்தானின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் ஆவார்.[1][2]

சையது முகம்மது அமீது அலி
Syed Muhammad Hamid Ali
سید محمد حامد علی
கிழக்கு பாக்கித்தான் ஆளுநர்
பதவியில்
1 ஏப்ரல் 1958 – 3 மே 1958
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 செப்டம்பர் 1906
இலக்னோ, இந்தியா
இறப்பு1972
கராச்சி, பாக்கித்தான்
பிள்ளைகள்ஒரே ஒரு மகன் சையது முகம்மது வாரீசு அலி மற்றும் மூன்று மகள்கள்
பெற்றோர்தந்தையார் பெயர்: சையத் முகமது அசுமத் அலி சாகேப்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

முகமது அமீது அலி 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று பிரித்தானிய இராச்சியத்தின் ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணங்களின் இலக்னோவில் பிறந்தார். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதியன்று இவர் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார்.

தொழில் வாழ்க்கை

தொகு

இந்தியாவின் பல்வேறு குடிமைப் பதவிகளின் உட்பிரிவுகள் மற்றும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். மாநிலத்தின் துணைப் போக்குவரத்து ஆணையராகவும், துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். 1946 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதியில் இவர் பிரதமரின் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்தார். 1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியில் கூடுதல் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1947 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியில் கிழக்கு வங்காள அரசாங்கத்தில் நிதி மற்றும் வருவாய் துறையின் செயலாளராகச் சேர்ந்தார். தலைமைச் செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

1958 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் 3 மே 1958 ஆம் ஆண்டு வரை கிழக்கு பாக்கித்தானின் தற்காலிக ஆளுநராக இருந்தார். இவரது பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் தலைமைச் செயலாளர் பதவிக்குத் திரும்பினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jafar, Abu. "Ali, Muhammad Hamid". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.
  2. "Chronology (April 1, 1958 to June 30, 1958)". Pakistan Horizon: 129–137. 1 January 1958. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அமீது_அலி&oldid=3886559" இலிருந்து மீள்விக்கப்பட்டது