முகியித்தீன் புராணம்

முகியித்தீன் புராணம் என்பது பிற்கால இசுலாமியக் காப்பியங்களுள் ஒன்று. இந்நூலின் காலம் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.[1] இந்நூலை இயற்றியவர் சேகுனாப்புலவர் ஆவார். பாட்டுடைத் தலைவர் முகியித்தீன் ஆண்டகை.

நூலமைப்பு தொகு

இந்நூலில் இரண்டு காண்டங்களும், 1343 பாடல்களும் உள்ளன. பாடல்கள் யாவும் விருத்தப்பா எனும் பாவகையில் அமைந்துள்ளன. இரு காண்டங்கள்: 1. தன்னுயிர் காக்கும் தவநிலைக் காண்டம்.2. மன்னுயிர் காக்கும் மகத்துவநிலைக் காண்டம்.

நூலின் வேறுபெயர் தொகு

இந்நூலுக்குக், குத்பு நாயகம் எனும் வேறு பெயரும் உண்டு. முகியித்தீன் என்பது குத்பு நாயகத்தின் வேறு பெயர்.

பெயர்க்காரணம் தொகு

குத்பு- தூண், ஈரான் நாட்டைச் சார்ந்த அப்துல் காதிர் என்பவர் ஞானநெறிக்குக் குத்பு( தூண்) போல விளங்கியதால் குத்பு நாயகம் எனப்படுகிறார்.

கதைக்கரு தொகு

நபியின் மகள் பாத்திமா. இவளுக்கும் அலி என்பாருக்கும் பிறந்த மகன் அசன். இவன் பாத்திமாவின் 60 ஆவது வயதில் இறையருளால் பிறந்தான். இந்த அசனே முகியித்தீன் தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோதே ஞானக்கல்வி பெற்றதாக கதை அமைகிறது.

உசாத்துணை தொகு

1) முகம்மது உவைஸ்,பீ.மு.அஜ்மல் கான்," இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1,2 மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பதிப்பு-1986. 2) அடைக்கலசாமி," தமிழ் இலக்கிய வரலாறு " கழக வெளியீடு-1994.

  1. பாக்யமேரி (2008). வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். பக். 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-234-1346-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகியித்தீன்_புராணம்&oldid=3004295" இலிருந்து மீள்விக்கப்பட்டது