முகுளம் (medulla oblongata)(இலங்கை வழக்கு: நீள்வளையமையவிழையம்)என்பது மூளைத்தண்டின் முன்பகுதியில் சிறுமூளைக்கு ஓரளவு கீழே அமைந்துள்ளது. இது கூம்பு வடிவ நரம்பன்களின் (நரம்பணுக்களின்)திரட்சியாகும். இது சிறுமூளைக்கும் தண்டுவடத்துக்கும் இடையில் அமைந்த நரம்பு முடிச்சு ஆகும். இது வாந்தி முதல் தும்மல் வரையிலான தன்னியக்க நனவிலிச் (அனிச்சைச்) செயல்களை ஆற்றுகிறது. முகுளத்தில் இதயத் துடிப்பு, மூச்சுயிர்ப்பு, வாந்தியெடுத்தல், குருதிக்குழல் இயக்கல் சார்ந்த நரம்பு மையங்கள் அமைந்துள்ளன. எனவே இது மூச்சுயிர்ப்பு, இதயத்துடிப்பு வீதம், குருதி அழுத்தம் ஆகிய தன்னியக்கப் பணிகளை ஆற்றுகிறது.

முகுளம்
medulla oblongata
முகுளம் ஊதா, நிறந்தீட்டிய மூளைத்தண்டின் பகுதி
மூளைப்புறணி நடுவில் அமைந்த முகுளத்தின் வெட்டுமுகம்.
விளக்கங்கள்
உறுப்பின் பகுதிமூளைத்தண்டு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்medulla oblongata, myelencephalon
MeSHD008526
NeuroNames698
NeuroLex IDbirnlex_957
TA98A14.1.03.003
TA25983
FMA62004
Anatomical terms of neuroanatomy

குமிழ் (bulb) என்ற சொல்லும் சிலவேளைகளில் முகுளத்துக்கு வழங்கப்படுகிறது. நோய் அறிகுறியியலில் முகுள நோயான குமிழ நரம்பன்கரு வாதம் (bulbar palsy) போன்ற சொற்களில் குறிப்பாக மருத்துவ நடைமுறையில் இவ்வழக்கு உள்ளது. இது முகுளம் சார்ந்த நரம்பு, நரம்புத்தடம் ஆகியவற்றையோ இவற்றோடு தொடர்புகொண்ட தசைகளையோ அதாவது நாக்கு, தொண்டை, குரல்வளை போன்றவற்றையோ குறிக்கலாம்.

உடற்கூற்றியல்

தொகு
 
முகுள அசைவூட்டம்
 
முகுள உறுப்புகள் (10-16) - (10) கூம்பு பட்டகம்; (11) முன் நடுவண் பிளவு; (15) நான்காம் உட்குழிவில் உள்ள சிலந்தி வலை; (13) மூளைப்புறணி நடுவம்; (7) பொன்சு
 
மண்டையோட்டு அடியில் பெருந்துளை (பெருநாழி) வழியாக துருத்திவந்து தண்டுவடத்தோடு இணையும் அசைவூட்டம்.

முகுளத்தில் பின்வரும் இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன:

  • மேல் திறப்புப் பகுதி அல்லது உச்சிப் பகுதி. இங்கு முகுளத்தின் முதுகுப் பக்கம் நான்காம் உட்குழிவால் உருவாகிறது.
  • கீழ் மூடிய பகுதி அல்லது அடிப்பகுதி. இங்கு நான்காம் உட்குழிவு முகுள வால் வெளிநுனியில் சுருங்கி, தண்டுவட மையக் குழலைச் சூழ்ந்தமைகிறது.

வெளிப் பரப்புகள்

தொகு

முகுளத்தின் முன் நடுவன் பிளவு பியாப் பொருளின் மடிப்பொன்றைக் கொண்டுள்ளது. இந்த மடிப்பு முகுளத்தின் நீளம் முழுவதும் நீள்கிறது. இது பொன்சின் கீழ் எல்லையில் ஒரு சிறு முக்கோணப் பகுதியில் முடிகிறது. இது சிறுவாய் அல்லது நாழி எனப்படுகிறது. இந்தப் பிளவின் இருபக்கத்திலும் முகுளக் கூம்பகங்கள் எழும்பி அமைகின்றன. இவற்றில் நரம்பு மண்டலத்தின் தண்டுவடப் புறணி, முகுளப் புறணி சார்ந்த கூம்பக நரம்புத் தடங்கள் அமைகின்றன. முகுள வாற்பகுதியில் இந்த நரம்புத் தடங்கள் கூம்பக நுனியில் குறுக்கிட்டு அவ்விடப் பிளவை மறைக்கின்றன.

கூம்பக நுனிக்கு மேலே உள்ள நடுவண் பிளவுக்கு முன்புறப் பக்கத்தில் இருந்து புறப்படும் வேறு நாரிழைகள், பொன்சின் மேற்பரப்புக்குக் குறுக்கே பக்கவாட்டில் செல்கின்றன. இவை முன் வெளிப்புற வில்வளைவு நாரிழைகள் எனப்படுகின்றன.

முகுளத்தின் மேற்பகுதியில் அமையும் முகுள முன்புற வரிக்குழிவுக்கும் முகுளப் பின்புற வரிக்குழிவுக்கும் இடையில் உள்ள பகுதி ஈரிணை வீக்கப்பகுதிகளைக் கொண்டுள்ளன. இவை மூளைப்புறணி நடுவுடல்கள் எனப்படுகின்றன. இவை இவற்றில் உள்ள மிகப் பெரிய நரம்புத் தன்னியக்க உட்கருவாலும் கீழ் மூளைப்புறணி நடுவுடல் உட்கருக்களாலும் உருவாகின்றன.

பின்புற நடுவண் வரிக்குழிவுக்கும் பின்புறப் பக்கவாட்டு வரிக்குழிவுக்குமிடையில் அமைந்த முகுளத்தின் பின்புறப் பகுதித் தண்டுவடத்தின் பின்புறப் தசையில் இருந்து வந்து நுழையும் நரம்புத் தடங்களைக் கொண்டுள்ளது. இவை நடுவில் உடனடியாக உள்ள நடுக்கோட்டுக்கும் பக்கவாட்டில் உள்ள மேல்தோல் தசைக்கும் இடையில் அமைந்த வட்ட எழுச்சித் தசைகள் ஆகும். இந்தத் தசைகள் வட்ட எழுச்சி அமைப்பிலும் மேல்தோல் முகைகளிலும் முடிகின்றன. இவை மேல்தோல் கருக்களிலும் வட்ட எழுச்சி அமைவுக் கருக்களிலும் உள்ள சாம்பல்நிறப் பொருளால் உருவாகின்றன. இந்தக் கருக்களில் உள்ள உடல்சார் உயிர்க்கலங்கள், பின்னந்தண்டின் நடுவண் நரம்புத் தடத்திலும் அதன் நரம்பு வேரிழைகளிலும் உள்ள இரண்டாம்நிலை வரிசை நரம்பன்களாகும். இவை அக வில்வளைவு நரம்பிழைகள் அல்லது தசைகள் எனப்படுகின்றன. இவை முகுளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு கடந்து சென்று நடுவண் நரம்பிழைக் கற்றையை உருவாக்குகின்றன.

இந்த முளைகள் அல்லது முகைகளுக்கு மேலே பின்புற முகுளப் பகுதியில் முக்கோணப் பயம்பு அல்லது பள்ளம் நான்காம் உட்குழிவுத் தரையின் கீழடிப் பகுதியாக அமைகிறது. இந்தப் பயம்பு அல்லது பள்ளத்தின் இருபுறமும் கீழ்ச் சிறுமூளை இணைகாம்பு அமைகிறது; இது முகுளத்தைச் சிறுமூளையுடன் இணைக்கிறது.

தோல்தசைப் படலத்துக்கு உடனே பக்கவாட்டில் அமைந்த முகுள அடிப்பகுதியில் மற்றொரு நீளவாட்ட உயர்ச்சி அமைகிறது. இது சாம்பல் முளை அல்லது முகை எனப்படுகிறது.

முகுளத்தின் அடிப்பகுதி பிணைப்பு நாரிழைகளால் ஆனதாகும். இவை முள்ளந்தண்டின் தன்புறப் பக்கவாட்டில் இருந்து மூளைத்தண்டின் எதிர்ப்புறப் பக்கவாட்டுகுக் குறுக்காக கடந்து செல்கின்றன; இதற்குக் கீழே தண்டுவடம் அமைகிறது.

குருதி வழங்கல்

தொகு

முகுளத்துக்குப் பின்வரும் பல தமனிகள் குருதியை வழங்குகின்றன.

  • முன் தண்டுவடத் தமனி: இது முகுளத்தின் நடுப்பகுதி முழுவதற்கும் குருதி வழங்குகிறது.
  • பின்கீழ் சிறுமூளைத் தமனி: இது முள்ளந்தண்டுத் தமனியின் பெருங்கிளையாகும்; இது முகுளத்தின் பின்பக்கவாட்டு பகுதிக்கு குருதி வழங்குகிறது; இங்கு தான் முதன்மை புலன் உணர்ச்சித் தடங்களும் நரம்பன் தொடர்புகளும் அமைகின்றன. இது சிறுமூளையின் ஒரு பகுதிக்கும் குருதி வழங்குகிறது.
  • முள்ளந்தண்டுத் தமனியின் நேரடிக் கிளைகள்: முள்ளந்தண்டுத் தமனி பிர இரண்டு முதன்மைத் தமனிகளுக்கு இடையில் அமைந்த பகுதிக்குக் குருதி வழங்குகிறது. இது தனித்த கருவுக்கும் (solitary nucleus) புலன்சார் கருக்களுக்கும் நாரிழைகளுக்கும் குருதி வழங்குகிறது.

வளர்ச்சி

தொகு

மூளைத்தண்டு முன்பகுதியில் இருந்து கருக்குழவி வளரும்போது முகுளம் உருவாகிறது. முகுள இறுதிப் பிரிப்பு கருவளர்ச்சிக் காலத்தில் 20 ஆம் வாரத்தில் நிகழ்கிறது.[1]

இந்நிலையில் நரம்புக் குழலின் சிறகுத் தட்டின் நரம்புமுகைகள் முகுளத்தின் புலன்கருவை உருவாக்குகின்றன. நரம்புக் குழலின் அடித்தட்டில் நரம்புமுகைகள் இயக்கக் கருவை உருவாக்குகின்றன.

  • சிறகுத் தட்டின் நரம்புமுகைகள் பின்வருவனவற்றை உருவாக்குகின்றன:
    • தனியக் கரு. இதில் சுவைசார் பொது உள்ளுறுப்பு உட்புகு நாரிழைகளும் சிறப்பு உள்ளுறுப்பு உட்புகு நாணும் உள்ளன.
    • முதுகுநாண் மூவுணர்புலன் நரம்புக் கரு. இதில் பொது உடல்சார் உட்புகு நாண் உள்ளது.
    • செவிச் சுருள்வளைக் கரு, செவி மையப்புழைக் கரு. இவற்றில் சிறப்பு உடல்சார் உட்புகு நாண் உள்ளது.
    • கீழ் ஆலிவரிக் கரு, இது சிறுமூளைக்குத் தகவலைத் தருகிறது.
    • முதுகு நாண் கரு. இதில் தொடைத்தசைக் கருவும், மூளைப் புறமடல் கருவும் உள்ளன.
  • நரம்புக் குழலின் அடித்தட்டு நரம்புமுகைகள் பின்வருவனவற்றை உருவாக்குகின்றன:
    • நாவடி நரம்புக் கரு. இதில் பொது உடல்சார் வெளியேறு நாரிழைகள் உள்ளன.
    • ஐயுறவுக்(ஆம்பிகூசு) கரு. இது சிறப்பு உள்ளுறுப்பு வெளியேற்றி நரம்புகளை உருவாக்குகிறது.
    • அலை(வேகசு)நரம்பின் முதுகியக் கரு, கீழ் உமிழ்நீர்க் கரு. இவை இரண்டும் சேர்ந்து பொது உள்ளுறுப்பு வெளியேறு நாரிழைகளை உருவாக்குகின்றன.

முகுளம் மூளையின் உயர் மட்டங்களை தண்டுவடத்தோடு இணைக்கிறது. அதன்வழியாகப் பின்வரும் தன்னியக்க நரம்பு அமைப்பின் பல்வேறு செயல்களுக்குப் பொறுப்பேற்கிறது:

  • தோள்பட்டைத் தமனி, பெருந்தமனி குறிகைகள் வழியான காற்றோட்டக் கட்டுபாடு. மூச்சுயிர்ப்பு உடலியக்கவியல் வேதிப் புலனேற்பிக் குழுக்களால் கட்டுபடுத்தப்படுகின்றன. இந்தவகை உணரிகள் குருதியின் அமிலத்தன்மை மாற்றத்தைக் கண்டுபிடிக்கின்றன; எடுத்துகாட்டாக, குருதியில் அமிலத்தன்மை மிகுந்தால், முகுளம் மின்குறிகைகளை விலாவிடைத் தசைக்கும் இடைத்திரை (phrenic) நரம்புத் தசைக்கும் அனுப்பி, அவற்றின் இணைப்பிழையங்களின் சுருங்கல் வீதத்த்தை கூட்டச் செய்து குருதி உயிரகவேற்றத்தைக் கூட்டச் செய்கிறது. வயிற்றுப் பக்க மூச்சுயிர்ப்புக் குழு நரம்பன்களும் முதுகுப் பக்க மூச்சுயிர்ப்புக் குழு நரம்பன்களும் இந்தக் கட்டுபாட்டுப் பணியை நிறைவேற்றுகின்றன. முகுள மூச்சுயிர்ப்புப் பணியை முன்போட்சிஞ்சர் வளாகம் அல்லது திரட்சியெனும் இடைநரம்பன் கொத்து நிறைவேற்றுகிறது.
  • இதயக் குருதிக்குழல் மையம் – பரிவு, இணைபரிவு நரம்பு மண்டலம்
  • குருதிக்குழல் இயக்க மையம் – அழுத்தப் புலனேற்பிகள்
  • வாந்தி, இருமல், தும்மல், விழுங்கல் மறிவினை மையங்கள். தொண்டi மறிவினை, விழுங்கல் மறிவினை அல்லது அண்ண மறிவினை, மாசெட்டர் மறிவினை ஆகியவை குமிழ மறிவினைகள் எனப்படுகின்றன.[2]

நோய்சார் அறிகுறிகள்

தொகு

நெஞ்சடைப்பின்போது ஏற்படும் குருதிக்குழல் அடைப்பு, முகுளக் கூம்பு பட்டகத் தடம், நடுவண் இதழ், நாவடிக்கரு ஆகியவற்றைக் காயப்படுத்தி நடுவண் முகுள நோய்த்தொகையை உருவாக்குகிறது.

பக்கவாட்டு முகுள நோய்த்தொகை பின்பக்கக் கீழ்ச் சிறுமூளைத் தமனி அடைப்பாலோ முள்ளந்தண்டுத் தமனிகளின் அடைப்பாலோ உருவாகும்.

பிற விலங்குகள்

தொகு

மஞ்சள் புழுக்களும் குழைகளிக் கெளிறும் முழுமையாக வளர்ந்த முகுளத்தைப் பெற்றுள்ளன.[3][4] தாடையிலிகளாகிய இவ்வகைத் தொடக்கநிலை மீன்களில் 505 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முகுளம் உருவாகப் படிமலர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.[5] முதனிலை ஊர்வனவற்றின் மூளையின் உறுப்பாக முகுளத்தின் இருப்புநிலை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது இக்கால ஊர்வனவாகிய முதலைகள், பல்லிகளின் சரிவிகிதமில்லா உருவளவில் இருந்து உய்த்துணர்ப்படுகிறது.

கூடுதல் படிமங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Carlson, Neil R. Foundations of Behavioral Neuroscience.63-65
  2. Hughes, T. (2003). "Neurology of swallowing and oral feeding disorders: Assessment and management". Journal of Neurology, Neurosurgery & Psychiatry 74 (90003): 48iii. doi:10.1136/jnnp.74.suppl_3.iii48.  [1]
  3. Nishizawa H, Kishida R, Kadota T, Goris RC; Kishida, Reiji; Kadota, Tetsuo; Goris, Richard C. (1988pmid = 3343402). "Somatotopic organization of the primary sensory trigeminal neurons in the hagfish, Eptatretus burgeri". J Comp Neurol 267 (2): 281–95. doi:10.1002/cne.902670210. 
  4. Rovainen CM (1985). "Respiratory bursts at the midline of the rostral medulla of the lamprey". J Comp Physiol A. 157 (3): 303–9.. doi:10.1007/BF00618120. பப்மெட்:3837091. 
  5. Haycock, Being and Perceiving
  • Haycock DE (2011). Being and Perceiving. Manupod Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9569621-0-2.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
முகுளம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுளம்&oldid=3837753" இலிருந்து மீள்விக்கப்பட்டது