முக்காவல் நாடு

திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் ஆமூர் என்னும் ஊர் உள்ளது. இதனைப் புறநானூற்றுப் பாடல் முக்காவல் நாட்டு ஆமூர் எனக் குறிப்பிடுகிறது. முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றவன் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. இவனைப் புலவர் சாத்தந்தையார் பாடியுள்ளார். [1]

காவிரி ஆறு முக்கொம்பு என்னுமிடத்தில் இரண்டாகப் பிரிகிறது. வடக்கில் ஓடுவதைக் கொள்ளிடம் என்றும், தெற்கில் ஓடுவதைக் காவிரி என்றும் கூறுவர்.

ஆற்றின் இரண்டு பிரிவால் தோன்றுவது மூன்று நிலப்பகுதி. இதனைத் தோற்றுவிக்கும் இடம் முக்கொம்பு. முக்கொம்பால் தோற்றுவிக்கப்பட்ட நிலப்பகுதியில் நடுவில் அரங்கமாய் உள்ளது திருவரங்கம். வடபால் உள்ளது முக்காவல் நாடு.

அடிக்குறிப்பு தொகு

  1. பாடல் புறநானூறு 80, 81, 82
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்காவல்_நாடு&oldid=3343813" இலிருந்து மீள்விக்கப்பட்டது