முக்தியார் அலி
முக்தியார் அலி (Mukhtiyar Ali) இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள பிகானேரைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடகர் ஆவார். சூஃபி இசை பாடும் வாய்வழி பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற மிராசிசின் அரை நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] அலியின் குடும்பத்தில் உள்ள ஆண்கள் பல தலைமுறைகளாக சூஃபி இசைக்கலைஞர்களாக இருந்து வருகின்றனர். அலி கபீர் மற்றும் மீராபாயின் கவிதைகளையும் , புல்லே சா போன்ற சூஃபி கவிஞர்களையும் பிரபலமாக பாடியுள்ளார். ' கட் அன்காத் ' திரைப்படத்தின் ஒரு பகுதியாக கபீர் திட்டத்தால் அவர் பிரலபமாக்கப்பட்டார். அதன் பிறகு நிறைய பிரபலமடைந்தார். 2007 ஆம் ஆண்டு சூலை மாதம் சர்வதேச அளவில் அறிமுகமானார். அப்போதிருந்து பல திரைப்படங்களுக்கு பாடல்களைப் பாடியுள்ளார். பைண்டிங் பேன்னி திரைப்படத்தில் ' பேன்னி ரே ' என்ற பாடலுக்காக 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த இசை அறிமுகத்திற்கான சிமா விருது வழங்கப்பட்டது.[2] இந்தப் படத்திற்கு இசையமைக்க அவர் மத்தியாசு டுப்லெசியுடன் இணைந்து பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mukhtiyar Ali – The Kabir Project". பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
- ↑ "Film Music Nominees: GiMA 2015". GiMA. Archived from the original on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2015.