முக்தி பிரசாத் கோகோய்
முக்தி பிரசாத் கோகோய் (Mukti Prasad Gogoi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் எழுத்தாளருமாவார். 1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.[2] பான்-போச்சன் என்ற அசாமிய சமையல் நூல் இவருடைய முக்கிய நூல்களில் ஒன்றாகும்.
முக்தி பிரசாத் கோகோய் Mukti Prasad Gogoi | |
---|---|
பிறப்பு | [1] | நவம்பர் 4, 1931
இறப்பு | ஏப்ரல் 24, 2021 | (அகவை 89)
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
பணி | மருத்துவர், எழுத்தாளர் |
பெற்றோர் | திராய்லோக்யா நாத்து கோகோய் (தந்தை) இயூட்டரா கோகோய் (தாயார்) |
விருதுகள் | பத்மசிறீ |
ஆரம்பகால வாழ்க்கை.
தொகுமுக்தி பிரசாத் கோகோய் அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள இராதாபரியில் பிறந்தார். தந்தை திரைலோக்யா நாத் கோகோய் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். தாயார் இயூதாரா கோகோய் ஓர் இல்லத்தரசி ஆவார். தனது ஆரம்பக் கல்வியை மாறன் தொடக்கப்பள்ளியில் முடித்து, திப்ருகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது உயர்நிலைப் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கொல்கத்தாவின் ரிப்பன் கல்லூரியில் உயர்கல்வியை முடித்த பின்னர் திப்ருகரின் அசாம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். 1956 ஆம் ஆண்டில், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஆர். கி. கர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1959 ஆம் ஆண்டில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் பட்டையம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
தொகுகோகோய் 1962 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று குவகாத்தி மருத்துவக் கல்லூரியில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். 1973 ஆம் ஆண்டில் துறையின் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், 1988 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை இந்தப் பதவியில் இருந்தார். குவகாத்தி மருத்துவக் கல்லூரியின் பல தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்த பெருமை இவருக்கு உண்டு. மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ இராயல் அகாடமி மற்றும் இந்திய தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் முக்தி பிரசாத் கோகோய் இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "A tribute to Padmashree Dr Mukti Prasad Gogoi". The Sentinel. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
- ↑ "Padma Awards, 1984" (PDF). www.padmaawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.