முசிறி கைலாசநாதர் கோயில்

முசிறி கைலாசநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் முசிறி என்ற பெயரில் ஊர்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இந்த ஊர் உள்ளது.

அமைவிடம் தொகு

இக்கோயில் பட்டுக்கோட்டை வட்டத்தில் பட்டுக்கோட்டைக்குக் வட கிழக்கே 10 கிமீ தொலைவில், மதுக்கூருக்கு மேற்கில் முசிறி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முன்னர் முசிறியம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது.[1]

இறைவன் தொகு

லிங்கத்திருமேனியில் இங்குள்ள இறைவன் கைலாசநாதர் ஆவார். இறைவி பெரியநாயகி.[1]

விழாக்கள் தொகு

தமிழ்ப்புத்தாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014