முசுண்டை
முசுண்டை என்பவன் வேம்பி என்ற ஊரின் சீறூர் மன்னன் ஆவான். பல்வேல் முசுண்டை என இவன் குறிக்கப் பெறுவதால் இவன் மிகுந்த படைவலிமை கொண்டவன் என்று அறியலாம். இவன் தன் போர் வீரர்கள் இறக்கும் போது அவர்களுக்கு நாள்தோறும் ஏற்றினங்களையும், நெல் முதலான தானிய குவியல்களையும், அவர்கள் மகன்களுக்கு களிறுகளோடே தேர்களையும் கொடுக்கும் கொடையுள்ளம் கொண்டவனாய் இருந்தான்.அகம் 249