முச்சோடியம் பெண்டாபோரேட்டு

வேதிச் சேர்மம்

முச்சோடியம் பெண்டாபோரேட்டு (Trisodium pentaborate) என்பது Na3B5O8(OH)2*H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒற்றை நீரேற்றாக இச்சேர்மம் உருவாகிறது. சோடியம் நேர்மின் அயனியும் [B5O8(OH)2]3− என்ற ஈரைதராக்சிடோபெண்டாபோரேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

முச்சோடியம் பெண்டாபோரேட்டு
Trisodium pentaborate
பண்புகள்
B5H2Na3O10
வாய்ப்பாட்டு எடை 285.03 g·mol−1
தோற்றம் ஒளிபுகும் படிகங்கள்
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Na3B5O8·2H2O அல்லது 3Na2O5B2O3·4H2O என தவறாக வழங்கப்பட்டாலும் இது வெறுமனே சோடியம் பெண்டாபோரேட்டு என்றே அழைக்கப்படுகிறது.[1] ஆனால் இந்த பெயர் Na2O·5B2O3·nH2O என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சேர்மத்திற்காக மிகவும் சரியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு

தொகு

முச்சோடியம் பெண்டாபோரேட்டு ஒற்றைநீரேற்று செஞ்சாய்துர படிக அமைப்பில் Pbca என்ற இடக்குழுவில் a = 880.4 பைக்கோமீட்டர், b = 1837.1 பைக்கோமீட்டர், c = 1092.4 பைக்கோமீட்டர், Z = 8 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் மெல்லிய தட்டுகளாக படிகமாகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Silvio Menchetti and Cesare Sabelli (1977): "The crystal structure of synthetic sodium pentaborate monohydrate". Acta Crystallographica Section B, volume B33, pages 3730-3733. எஆசு:10.1107/S0567740877011959