முட்டைஓடு
முட்டைஓடு (Eggshell) என்பது முட்டையின் கடினமான வெளியுறை ஆகும். சில முட்டைகள் மென்மையான வெளியுறை கொண்டுள்ளன. பொதுவாக பறவை முட்டைகள் கடினமான சுண்ணாம்பினாலான ஓட்டைக் கொண்டுள்ளன.
வகைகள்
தொகுபூச்சிகளின் முட்டைகள்
தொகுபூச்சிகள் ம்ற்றும் பிற கணுக்காலிகள் பல வகையான, வடிவமுடைய முட்டைகளை இடுகின்றன. சில பூச்சிகளின் முட்டைகள் தோல் போன்ற மென்மையான உறையை கொண்டும், சில கடினமான சுண்ணாம்பினாலான ஓடு கொண்டவையாக உள்ளன. தோல் போன்ற மென்மையான உறை பெரும்பாலும் புரதத்தாலானது.
மீன்கள், இருவாழ்விகள், ஊர்வனவற்றின் முட்டைகள்
தொகுமீன் மற்றும் நீர்நில வாழ்வன இவைகளில் பொதுவாக இவைகளில் வெளிக்கருதல் நடைபெறுகிறது, முட்டைகள் தோல் போன்ற மென்மையான உறையை கொண்டிருக்கும்.
பொதுவாக ஊர்வனவற்றின் முட்டைகள் அமுங்கக்கூடியவாகவோ, கடினமான ஓடுடையவை இடுகின்றன. பாம்புகளின் முட்டைகள் தோல் போன்ற மென்மையான உறையை கொண்டிருக்கும். ஆமைகளின் முட்டைகள் பெரும்பாலும் கடினமான ஓடுடைய்யாகவோ அல்லது நெகிழ்வானவையாகவோ இருக்கும்.
பறவைகளின் முட்டைகள்
தொகுபறவை முட்டைகள் கடினமான சுண்ணாம்பினாலான ஓட்டைக் கொண்டுள்ளன. இவை பாலணுவுடைய முட்டையை இடுகின்றன.
பாலூட்டிகளின் முட்டைகள்
தொகுமுட்டையிடும் பாலூட்டிகளான மோனோட்ரிம்களின் முட்டைகள், ஊர்வனவற்றின் முட்டைகளைப் போல் மென்மையான ஓடுடைய முட்டைகளை இடுகின்றன.
மேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Kilner, R. M. (2006). "The evolution of egg colour and patterning in birds". Biological Reviews 81 (3): 383–406. doi:10.1017/S1464793106007044. பப்மெட்:16740199. https://archive.org/details/sim_biological-reviews_2006-08_81_3/page/383.