முதலாம் கீர்த்திவர்மன்

முதலாம் கீர்த்திவர்மன் (Kirtivarma I, ஆட்சிக்காலம் 566-597 ), முதலாம் புலிகேசிக்குப் பின் சாளுக்கியர் மரபில் மன்னரானவன். இவன் வெளியிட்ட கோலாபுர கோதாச்சி செப்பு பட்டயங்களில் தன் பெயரை கட்டி அரசர் என எழுதி வைத்திருக்கின்றான்[1]. கட்டி என்பது இவனது இயற்பெயர் என்றும், இப்பெயர் கன்னட பெயர் எனவும் வரலாற்றாய்வளர்கள் கருதுகின்றனர்[2]. பழந்தமிழ் இலக்கியங்களிலும் "வல்வேற் கட்டி"(குறுந்தொகை:11) "போராடும் தானை கட்டி"(அகம்226), "பல்வேற் கட்டி" (சிலம்பு : 25 : 157 ) எனவே இவன் அழைக்கப்படுகின்றான்.

அரசைப் பலப்படுத்துதல்

தொகு

முதலாம் கீர்த்திவர்மன் புதிதாக நிறுவப்பட்ட சாளுக்கிய அரசை வலிமைப்படுத்த முயன்றான். இவன் கதம்பர்களை அடக்கினான். இவன் நாளவாடி என்ற பகுதியை ஆண்ட நாளர்களை அடக்கியதன் மூலம் சாளுக்கிய பேரரசு தனது தெற்கு எல்லையை விரிவாக்கிக்கொண்டது.

துறைமுகமான அப்போது ரேவதிதீபம் என்றழைக்கப்பட்ட தற்போதைய கோவாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். கதம்பர்களின் நண்பர்களாக இருந்த தற்போதைய சிமோகா மாவட்டப்பகுதிகளை ஆண்ட செண்டிரக்கர் என்னும் மரபினரைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டு அவர்கள் மரபிலிருந்து ஒரு இளவரசியைத் திருமணம் செய்துகொண்டான்.

மரணம்

தொகு

கீர்த்திவர்மன் மறைந்தபோது இவனது மகன் இரண்டாம் புலிகேசி சிறுவனாக இருந்த காரணத்தால் இவனது தம்பி மங்களேசன் அரசாட்சியை ஏற்றான்.

மேற்கோள்

தொகு
  • Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  1. Political History of the Chālukyas of Badami by Durga Prasad Dikshit pg.274 (1980)
  2. The Language of the Gods in the World of Men: Sanskrit, Culture, and Power in Premodern India Sheldon Pollock Univ of California Press, (2009)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கீர்த்திவர்மன்&oldid=2487916" இலிருந்து மீள்விக்கப்பட்டது