முதலாம் பராக்கிரம பாண்டியன்
தமிழக மன்னரான முதலாம் பராக்கிரம பாண்டியன், பாண்டிய தலைநகரான மதுரையில் இருந்து ஆட்சி நடத்தினார்.இவர் பாண்டிய உள்நாட்டுப்போரில் (1169-1177), 1169-ல் சோழ வம்சத்தின் அடிமையாக இருந்த, இவர்தம் சமகால போட்டியாளரும், சிம்மாசன உரிமை கோருபவரான குலசேகர பாண்டியனால் முற்றுகையிடப்பட்டார். இந்த முதலாம் பராக்கிரம பாண்டியன் இலங்கை பொலன்னருவாவின் மன்னான பராக்கிரமபாகுவிடம் உதவி கோரினார். ஆனால் பின்னர் முதலாம் பராக்கிரம பாண்டியன் தூக்கிலிடப்பட்டார். பின் குலசேகர பாண்டியன் சிம்மாசனத்தில் ஏறினார். ஆயின் இவர் இறுதியிலே 1171-ல் சோழநாட்டில் தஞ்சம் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலாம் பராக்கிரம பாண்டியனின் மகன் மூன்றாம் வீரபாண்டியன் சோழர் படையினால் தோற்கடிக்கப்படும் முன்பு பாண்டிய சிம்மாசனத்தில் ஏறினான்.
1212-ஆம் ஆண்டில் வம்சத்தில் அடுத்தபடியாக இருந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன், இலங்கைமீது படையெடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் "பொலன்னருவாவின் பராக்கிரம பாண்டியன்" என்ற பட்டத்துடன் மன்னனாக ஆனார்.