முதலாம் பல்கேரிய பேரரசு

முதலாம் பல்காரியப் பேரரசு (First Bulgarian Empire) என்பது கிபி 7 வது மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இடைக்கால பல்கேரிய பிரதேசமாக இருந்தது. இதன் பகுதிகள் தென்கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கி இருந்தது. இந்தப் பேரரசு 681 இல் அஸ்பரூக் என்பவரின் தலைமையிலான பல்கர் பழங்குடியினரால் நிறுவப்பட்டது.[8] இவர்கள் தெற்கு ஸ்லாவிக் பழங்குடியினரின் உதவியுடன் கான்ஸ்டன்டைன் IV இன் தலைமையிலான பைசண்டைன் இராணுவத்தை தோற்கடித்தனர். இப்பேரரசின் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில், பல்கேரியா தன்யூப் நதி வளைவில் இருந்து கருங்கடல் வரையில் மற்றும் தினேப்பர் ஆற்றில் இருந்து அட்ரியாடிக் கடலுக்கு பரவியது.

முதலாம் பல்கேரியப் பேரரசு
ц︢рьство бл︢гарское
681–1018
First Bulgarian Empire, early 10th century (925)
First Bulgarian Empire, early 10th century (925)
தலைநகரம்பிளிசுக்கா (681–893),
பிரெசிலாவ் (893–968/972),
ஸ்கோப்ஜே (1018 வரை)
பேசப்படும் மொழிகள்பல்காரியம்,[1]
புரோட்டோ-சிலாவியம்,
பைசாந்தியக் கிரேக்கம்,[2][3][4]
பண்டைய மசிதோனிய மொழி (893 முதல் அதிகாரபூர்வ மொழி)
சமயம்
தெங்கிரி, சிலாவியப் பாகால் (681–864),
கிழக்கு மரபுவழி (864 முதல் அரச சமயம்)
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• 681–700
அசுப்பாருக் (முத்லாவது)
• 1018
இரண்டாம் பிரெசியான் (கடைசி)
வரலாற்று சகாப்தம்நடுக்காலம்
• அசுப்பாருகின் வருகை
681
• கிறித்தவமயமாதல்
864
• பண்டைய மசிதோனிய மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படல்
893
• பேரரசராக முதலாம் சைமன்
913
• பைசாந்தியப் பேரரசில் பல்கேரியா அமைப்பு
1018
பரப்பு
830[5]400,000 km2 (150,000 sq mi)
927[6]325,000 km2 (125,000 sq mi)
1000[7]165,000 km2 (64,000 sq mi)
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBG
முந்தையது
பின்னையது
Quaestura exercitus
Image missing Avar Khaganate
Old Great Bulgaria
Byzantine Empire under the Macedonian dynasty
Second Bulgarian Empire

பால்கன் பகுதியில் இப்பேரரசானது பலமானதாக உருவெடுத்ததால், பல நூற்றாண்டுகளாக பைசான்டைன் பேரரசுடன் நீண்டகால தொடர்பினை கொண்டிருந்தது, சில நேரங்களில் நட்பு நாடகவும் மற்றும் சில நேரங்களில் மிகப்பெரிய விரோதியாகவும் இருந்தது. பல்கேரிய பேரரசு பைசான்டைன் பேரரசுடன் பல போர்களை நடத்தியது.இப்பேரரசு பைசான்டைன் அரசின் வடக்கே உள்ள பிரதான எதிரியாக மாறியது. எதிரிகளாக இருப்பினும் இந்த இரு நாடுகளும் பல முறை சமாதானம் அடைந்தும், கூட்டணியாகவும் செயல்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை கான்ஸ்டான்டினோப்பில் நகரை இரண்டாம் முறையாக அரபு படை முற்றுகையிட்ட போது பல்கேரிய இராணுவம் அந்த முற்றுகையை தகர்த்து அரேபிய இராணுவத்தை அழித்ததால், தெற்காசிய ஐரோப்பாவில் படையெடுக்க இருந்த அரபு இராணுவத்தின் முயற்சியைத் தடுத்தது.

பைசாந்தியம் பல்கேரிய பேரரசின் பகுதிகளில் வலுவான கலாச்சார செல்வாக்கைக் கொண்டிருந்தது, இது 864 ஆம் ஆண்டில் பல்கேரியப்ப் பகுதிகளில் கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு வழிவகுத்தது.அவார் ககானேட் பகுதியின் சிதைவுக்கு பிறகு பல்கேரிய பேரரசு அதன் வடமேற்கு பகுதியான பன்னோனியன் சமவெளி வரை விரிவாக்கம் அடைந்தது.பின்னர் பெகெனெக்ஸ் மற்றும் க்யூமன்ஸ் ஆகியோரின் முன்னேற்றத்தை பல்கேரியர்கள் எதிர்கொண்டனர், மேலும் மாக்யர்ஸ் மீது ஒரு வெற்றிகரமான தாக்குதலை நடத்தி, பன்னோனியாவில் நிரந்தரமாக தங்களின் ஆளுமையை நிலைநிறுத்தினர்.9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 10 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முதலாம் சிமியன் பைஸாண்டியர்களின் மீது தாக்குதல் நடத்தி வெற்றிகளைப் பெற்றார்.அதன் பிறகு, அவர் பேரரசர் பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் பல்கேரிய மாநிலத்தை மிகப்பெரிய அளவிற்கு விரிவுபடுத்தினார்.917 ல் அஞ்சியலஸ் போரில் பைசான்டைன் இராணுவத்தை அழித்தபின், பல்கேரியர்கள் 923 மற்றும் 924 இல் கான்ஸ்டாண்டினோபுலை முற்றுகையிட்டனர். ஆயினும் பைசண்டைன்கள் 1014 இல், இரண்டாம் பேசில் இன் கீழ், க்ளைடியன் போரில் பல்கேரியர்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி அடைந்தனர். 1018ல், கடைசி பல்கேரிய கோட்டையானது பைசாந்தியப் பேரரசிடம் சரணடைந்தது. இதன் மூலம் முதலாம் பல்கேரிய பேரரசு முடிவுக்கு வந்தது.[9]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பல்கேரிய_பேரரசு&oldid=3707464" இலிருந்து மீள்விக்கப்பட்டது