முதல் ஜெனீவா உடன்படிக்கை


முதல் ஜெனீவா உடன்படிக்கை (First Geneva Convention) என்பது 1864 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் திகதி அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனீவா நகரில் வைத்து உலகநாடுகளிடையே போர் நடைபெரும்போது போர் வீரர்களை எப்படி நடத்தப்படவேண்டும் என்ற உலகலாவிய சட்டம் இயற்றப்பட்டதைக் குறிக்கும்.[1] பொதுவாக இது ஜெனீவா உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து, நாட்டின் பணக்காரரான ஹென்றி டியூனாண்ட், என்பவரால் 1863 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட செஞ்சிலுவை சங்கத்தின் முன்முயற்சியின் காரணமாக இந்த உடன்படிக்கை முடிவுசெய்யப்பட்டது.

  • இந்த உடன்படிக்கையின் மூலம் போரில் காயமடையும் அனைத்து நாடு வீரர்களுக்கும் மனிதாபிமான முறையில் முதலுதவி செய்வது.
  • அனைத்து நாடுகளும் நடுநிலையோடு நடந்து கொள்வது என் முடிவெடுக்கப்பட்டது.
  • காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
  • எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
  • காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும். * இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும். என்பன முக்கிய அம்சங்களாகும்.
1864 ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்த புத்தகம்

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pictet, Jean S. (1951), "The New Geneva Conventions for the Protection of War Victims", The American Journal of International Law, 45 (3): 462–475, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2194544