முதியர்

முதியர் என்போர் சங்க காலக் குடிமக்கள். முதுமலைக் காட்டுப் பகுதியில் வாழ்ந்தமையால் இவர்கள் முதியர் எனப்பட்டனர்.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவர்களோடு நட்புறவு கொண்டு, அவர்களுக்குத் தன் நாட்டின் ஒரு பகுதியைப் பங்கிட்டுத் தந்து ஆளச் செய்தான். [1]

ஆண்டால் மூத்தவரை முதியவர் என்கிறோம். அறிவில் மூத்த பெரியவர்களைத் திருவள்ளுவர் முதுவர் என்கிறார். [2] ஆண்டில் மூத்தவரையும் இளையவரையும் குறிக்க ‘உறுவர்’. ‘சிறுவர்’ என்னும் சொற்கள் சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்தன. [3]

சிறுவர், இளையர், முதியர் என்னும் சொற்களையும் பருவ நிலைகளைக் குறிக்கச் சங்க கால நூல்கள் பயன்படுத்தியுள்ளன. [4]

இவற்றையும் காண்கதொகு

அடிக்குறிப்புதொகு

  1. மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் மரபின் மண் வகுத்து ஈத்து பதிற்றுப்பத்து பதிகம் 3-4
  2. நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு – குறள் 715
  3. உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பி.புறம் 381
  4. அகம் 30-4, 233-8, 348-12, புறம் 254, நற்றிணை 207-7, பரிபாடல் 10-19, பதிற்றுப்பத்து 70-21, பெரும்பாணாற்றுப்படை 268
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியர்&oldid=1106421" இருந்து மீள்விக்கப்பட்டது