முதியோர் கொலை

முதியோர் கொலை (Senicide) என்பது முதியோர்களை கொலை செய்வதாகும்.

இந்தியாவில் முதியோர் கொலைகள்

தொகு

இந்தியாவின் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில், பெண் சிசுக் கொலை போல் முதியோர் கொலைகள் அதிகரித்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளது.[1][2] வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகளின் இக்கொடூரச் செயலை கருணைக் கொலை என தவறாக குடும்ப உறுப்பினர்களும், சமூகமும் கருதுவதுடன், குற்ற உணர்வற்ற சமூகச் சடங்கு எனக் குறிப்பிடத் தவறுவதில்லை.[3][4].[4][5][6][7]

காரணங்கள்

தொகு

முதியோர் கொலைகளுக்கு, இந்தியாவில் கூட்டுக் குடும்ப முறை சிதைந்ததும், கிராம மக்கள் அதிக அளவில் நகர்புறத்தில் குடியேறுவதும், முதியோரை பேணும் சமூகப் பொறுப்பு குறைந்து வருவதும் முக்கிய காரணிகளாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.[8] மேலும் முதியோர் கொலையை அறிந்தவர்கள் கூட, அத்தகவலை காவல் துறைக்கு தெரிவிப்பதில்லை. எனவே காவல்துறையினரால் குற்றம் செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு, முதியோர் கொலைகளை தடுக்க இயல்வதில்லை.

கடைப்பிடிக்கும் முறைகள்

தொகு

படுத்த படுக்கையாக உள்ள முதியோர்களின் உயிரை வெகு விரைவில் பறிக்க தமிழ்நாட்டில் பல வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.[9]

  1. தலைக்கு ஊத்தல் எனும் தலைக்கு விளக்கெண்ணெயை நன்கு தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி பின் இளநீரை குடிக்கச் செய்தல்.
  2. குடும்ப உறுப்பினர்கள் வரிசையாக தொடர்ந்து முதியோரின் வாயில் பால் ஊற்றுதல்.(இதனை ஒரு சடங்காக செய்தல்)
  3. பூச்சிக் கொல்லி மாத்திரைகள் கொடுத்தல்
  4. விஷ ஊசி போடுதல்.
  5. கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுதல்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141214_oldagepart6
  2. http://www.bbc.co.uk/tamil/india/oldageseriescluster
  3. http://articles.latimes.com/2013/jan/15/world/la-fg-india-mercy-killings-20130116
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.
  5. http://www.thehindu.com/features/magazine/article257994.ece
  6. http://palliumindia.org/2010/03/defining-mercy/
  7. 100 கிராமங்களில் 150 கொலைகள்
  8. http://www.semparuthi.com/?p=116249
  9. http://www.thoothuonline.com/archives/70432
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியோர்_கொலை&oldid=3568094" இலிருந்து மீள்விக்கப்பட்டது