முதுகெலும்புள்ள உயிரிகளுக்கான அருங்காட்சியகம்

அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகம்

முதுகெலும்புள்ள உயிாிகளுக்கான அருங்காட்சியகம் (Museum of Vertebrate Zoology) பெர்க்லி கலிஃபோர்னியா பல்கலைகழகத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். 1908 ஆம் ஆண்டில் தொல்பொருள் அறிஞர் அன்னி மாண்டேக் அலெக்சாண்டரால் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. அலெக்சாந்தர், உயிரியலாளர் ஜோசப் கிரின்னலை அருங்காட்சியக இயக்குனராகப் பரிந்துரைததார். ஜோசப் கிரின்னல் 1939 இல் இறக்கும்வரை அப்பொறுப்பில் இருந்தார். [1]

முதுகெலும்புள்ள உயிாிகளுக்கான அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1908
அமைவிடம்கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
வகைஅறிவியல் அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவு640,000 க்கும் மேற்பட்ட மாதிரிகள்
வருனர்களின் எண்ணிக்கைஆய்வு மேற்கொள்வோர் மட்டும்
இயக்குனர்மைக்கேல் நாச்மேன்
மேற்பார்வையாளர்ரௌரி போவி (Rauri Bowie) பறவைகள்,
ஜிம்மி எ மக்கைர் (Jimmy A McGuire) (ஊர்வன),
Eileen Lacey (பாலூட்டிகள்)
வலைத்தளம்Museum of Vertebrate Zoology Main Page

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிற முக்கிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடுகையில், மேற்குக் கடற்கரைப் பகுதியில் முதுகெலும்பு உயிரியல் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுக்கு இந்த அருங்காட்சியகம் மிக முக்கியமாகவும் அதிகாரம் மையமாகவும் மாறியது. இது பாலூட்டிகள், பறவைகள், நீர் ஊற்றுக்கள் மற்றும் ஊர்வனவற்றின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையங்களுல் ஒன்றாகும், [2][3] இந்த அருங்காட்சியகம், யூ. சி. பெர்க்லி வளாகத்தில், பள்ளத்தாக்கு உயிரி அறிவியல் கட்டிடத்தின், 3 வது மாடியில் 3101 ஆம் அறையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Museum of Vertebrate Zoology - History.
  2. Museusm of Vertebrate Zoology - Collections.
  3. "Science Today, radio program of University of California". Archived from the original on 2013-12-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.

வெளி இணைப்புகள் தொகு