முத்தத்தி
முத்தத்தி (Muthathi) அல்லது முட்டட்டி என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மலாவல்லிக்கு அருகில் இருக்கும் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு குடியேற்றமாகும். [1] இது காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் தாயகமான அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் சீதை மற்றும் அனுமன் ஆகியோருடன் புராணத் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது. மேலும், நகரத்திற்கு அருகில் இந்து தெய்வமாக வணங்கப்படும் அனுமனுக்கு ஒரு சிறிய கோயில் ஒன்று உள்ளது. நன்கு இணைக்கப்பட்ட மலைப்பாங்கான இந்த இடத்தை பெங்களூரிலிருந்து நேரடி பேருந்து அல்லது தனியார் வாகனங்கள் மூலம் அணுகலாம். கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் இந்த இடத்தின் கோயில் தெய்வமான முத்தத்திராயன் (அனுமன்) நினைவாக முத்துராஜா என்று பெயரிடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. [2]
புகைப்படங்கள்
தொகு-
மார்ச் 2011
-
முத்தத்தி செல்லும் வழி
-
ஆகத்து 2011