முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில்

முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், முத்தனம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான அம்மன் கோயிலாகும்.[2][3]

முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:முத்தனம்பாளையம், திருப்பூர் வட்டம்[1]
கோயில் தகவல்
மூலவர்:அங்காளபரமேஸ்வரி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பதிமூன்றாம் நூற்றாண்டு
இணையத்தளம்:http://www.muthanampalayamangalamman.tnhrce.in/contactus.html

வரலாறு தொகு

இக்கோயில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கொங்கு மண்டலத்தில் உள்ள முதன்மையான சக்தி பீடம் மற்றும் பழமையான அங்காளம்மன் கோவில் இதுவே ஆகும். செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இக்கோவிலின் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்களாக உள்ளனர். இரண்டு மாத கால இடைவேளையில் இச்சமுகத்தை சேர்ந்த பத்து கூட்டத்தினர் சுழற்சி முறையில் பூஜை செய்து வருகிறார்கள்.[4][5]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அங்காளம்மன் சன்னதியும், முருகன், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[6]

திருவிழாக்கள் தொகு

1. சித்திரை - சித்திரை முதல் நாள் மூலவர் மீது நேரடியாக சூரிய ஒளி விழுகிறது. அன்று சிறப்பு பூஜையும் நடைபெறும். சித்திரை பெளர்ணமி திருவிளக்கு பூஜை

2. ஆடி - ஆடி ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா

3. புரட்டாசி - நவராத்திரி கொழு அம்புசேர்வை நிகழ்ச்சி

4. கார்த்திகை - தீப திருவிழா

5. மார்கழி - ஆருத்திரா தரிசனம்

6. தை - தை 1 ஆம் நாள் - ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா தை அமாவாசை - ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா

7. மாசி - மகா சிவராத்திரி 10 நாட்கள் திருவிழா[7][8]

குலதெய்வ குடிப்பட்டு மக்கள் தொகு

  • செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த அன்னியூரார் கோத்திரம், கருமணவாத்தியார் கோத்திரம், காங்கேயன் கோத்திரம், காஞ்சான் கோத்திரம், குன்னத்துரார் கோத்திரம், கேரளகும்ப கோத்திரம், கணேசர்பட்டம் சேவூரர் கோத்திரம், சொக்கன் கோத்திரம், நல்லாதம்பிரன் கோத்திரம், நெய்க்கரன் கோத்திரம், பட்டி கோத்திரம், பழனியுரார், பூண்டிபெரியத்தனக்காரர் கோத்திரம், முருகன் கோத்திரம், முத்துக்களி தாரகன் கோத்திரம் என பல கூட்டம் பங்காளிகளும்.
  • வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த முழுக்காதன் கூட்டம்,ஆந்தை கோத்திரம், ஆவான் கோத்திரம், ஓதாளன் கோத்திரம், காடை கோத்திரம், குளாயன் கோத்திரம், சாத்தந்தை கோத்திரம், செங்கண்ணன் கோத்திரம், செம்பன் கோத்திரம், செம்பூத்தான் கோத்திரம், பண்ணை கோத்திரம், பாண்டியன் கோத்திரம், பிள்ளங்கன்னாந்தை கோத்திரம் ஈஞ்சன் என பல கூட்டம் பங்காளிகளும் இக்கோவில் குலதெய்வ குடிப்பட்டு மக்களாக உள்ளார்கள்.[9]
  • கொங்கு வேளாளர் (குடிமகன்)சமூகத்தை சார்ந்தவர்களுக்கும் காஞ்சிக்கோவில் நாட்டார் ஈஞ்சன் குலம் இக்கோயில் குலதெய்வமாக விளங்குகிறது.[சான்று தேவை]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
  3. [2]
  4. "முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில் தல வரலாறு" (PDF). முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில். இந்து சமய அறநிலையத் துறை. p. 9. Archived from the original (PDF) on 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
  5. "முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில் தல வரலாறு" (PDF). முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில். இந்து சமய அறநிலையத் துறை. p. 8. Archived from the original (PDF) on 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
  6. "முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில் தல வரலாறு" (PDF). முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில். இந்து சமய அறநிலையத் துறை. p. 13. Archived from the original (PDF) on 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
  8. [3]
  9. "முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில் தல வரலாறு" (PDF). முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில். இந்து சமய அறநிலையத் துறை. p. 9. Archived from the original (PDF) on 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.