முத்தறுவாய் மின்திறன்
முத்தறுவாய் மின்திறன் அல்லது மும்முனை மின்சாரம் என்பது மூன்று கடத்திகளில் மாறுமின்னோட்டம் செல்லும். ஒன்றை அடையாளப் புள்ளியாக கொண்டு, மற்றவை 1/3பை, 2/3பை இடம்மாறி வரும். ஒரு நில தொடுப்பும் அல்லது நொதுமல் கம்பியும் இருக்கும்.
மிக அதிகமான மின் திறன் தேவைப்படும் இடங்களில் இது பயன் மிக்கது. மிக அதிக மின்சாரம் ஒரே சமயத்தில் தேவைப்படும்போது மூன்று முனை மின்சக்தி தேவைப்படும். தொழிற்சாலைக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கும் நிச்சயம் இந்த மின்சக்திதான் கொடுக்கப்படும். வீட்டில் குளிர்சாதனப் பெட்டி பொருத்தும்போதும் மூன்றுமுனை மின்சக்தி இணைப்புகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் மின்சாரத்தை ஒவ்வொரு தறுவாயும் ஒவ்வொரு வேலைக்கு பயன்படுத்தலாம். ஒப்பீட்டளவில் குறைந்த கம்பிகள் ஊடாக அதிக மின்னாற்றலை செலுத்த இம்முறை உதவுகிறது. மூன்று முனை மின் இணைப்பில் மின்சுற்று என்பது மூன்று மாற்று மின் இணைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம் இதில் ஒருபோதும் சுழியத்தைத் தொடாது. எனவே, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்பட வாய்ப்பு மிக அதிகம். தவிர மூன்று முனை மின் இணைப்பு மூன்று மடங்கு மின்சார சுமையை இதனால் தாங்க முடியும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜி. எஸ். எஸ். (10 சூன் 2017). "சிங்கிள் பேஸ், திரீ பேஸ் எதைப் பொருத்தலாம்?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2017.