முத்திநிலை (நூல்)

தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல் முத்திநிலை. இதில் முத்தி பற்றிய ஆன்மானந்த வாதம் மறுக்கப்பட்டுள்ளது. நூலில் 19 வெண்பாக்கள் உள்ளன.

நூலின் முதல் பாடல் – எடுத்துக்காட்டு [1]

சிவசத்தியைத் திளைப்பர் சீவன் முத்தர் என்றும்
அவசத்தி மாயாது அகம் என் – சிவசத்தி
தன்னைக் கண்டு இங்கு அருளால் சச்சிதானந்தம் எனும்
மன்னைத் திளைத்து வாழ்வார்.

சிவசத்தியைக் கண்டு திளைப்பதுதான் சீவன் முத்தி.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. பொருள் நோக்கில் பிரித்து எழுதிக் காட்டப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்திநிலை_(நூல்)&oldid=1767254" இலிருந்து மீள்விக்கப்பட்டது