முத்துஐயன்கட்டு குளம்
முத்தையன் கட்டுக்குளம் (Muthuiyankaddu Kulam) இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளமாகும். இது ஒட்டிசுட்டானில் இருந்து சுமார் 4 மைல் (6 கிலோமீற்றர்) தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இதன் சரியான அமைவிடம் 09°12'07"N 80°36'31"E ஆகும். செயற்கைக் குளமான இதற்கு நீர் வழங்கும் ஆறு பேராறு (ஆறு) ஆகும்.இதன் பராமரிப்பு வடமாகாணசபை , நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.இதன் மொத்த பரப்பளவு 66 சதுரமைல் (171 சதுர கிலோமீட்டர்). இது 41,000 ஏக்கர் அடி (50,572,755 கனமீற்றர்) கொள்ளளவுடையது.
முத்தையன் கட்டுக்குளம் | |
---|---|
வட மாகாணத்தில் அமைவிடம்]] | |
அமைவிடம் | வட மாகாணம் |
ஆள்கூறுகள் | 09°12′07″N 80°36′31″E / 9.20194°N 80.60861°E |
வகை | செயற்கைத் தேக்கம் |
ஆற்று மூலங்கள் | பேராறு |
வடிநிலப் பரப்பு | 66 sq mi (171 km2)[1] |
மேலாண்மை முகமை | நீர்ப்பாசனத் திணைக்களம், வட மாகாண சபை |
நீர்க் கனவளவு | 41,000 ஏக்கர்.அடி (50,572,755 கனமீட்டர்[1] |
வரலாறு
தொகுபேராற்றில் உள்ள குளம் ஆரம்பகாலத்தில் முத்துராயன் கட்டுக்குளம் என்றும் மண் மலை என்றும் அழைக்கப்பட்டது.[2] 66 சதுரமைல் பரப்பளவு கொண்ட இக்குளத்தின் பராமரிப்பு பணி 1959 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.[3]
1960 ம் ஆண்டு காலத்தின் பிற்பகுதியில் இதன் வரப்புப் பகுதி சுமார் 5,850 அடி ( 1783 மீற்றர்) நீளமுடையதாகவும் 27 அடி ( 8 மீற்றர்) உயரமுடையதாகவும் இருந்தது. அப்போது குளத்தின் கொள்ளளவு 41,000 ஏக்கர் அடியாகவும் ( 50,572,755 கன மீட்டர்) இருந்தது. மேலும் இக்குளத்தின் நீர்ப்பரப்பிடம் சுமார் 3,100 ஏக்கர் ( 1,255 ஹெக்டர்) ஆக உள்ளது.[2] மேலும் குளத்தின் இடது பக்கம் 500 அடி கொண்ட (152 மீட்டர்) கலிங்கு உண்டு.[4] அதன் இடது மற்றும் வலது புறத்தில் உள்ள மதகுகள் ஒவ்வொன்றும் 3 அடி 3 அங்குலம் 4 அடி 6 அங்குலம் கொண்டவை. 2014 ஆம் ஆண்டில் இது 6,100 ஏக்கர்களுக்கு(2469 ஹெக்டர்) நீர்ப்பாசன வசதி அளிக்கும் திறனைக் (கொள்ளவைக்) கொண்டிருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Statistical Information of the Northern Province - 2014. வட மாகாண சபை. p. 93.
- ↑ Arumugam, S. (1969). Water Resources of Ceylon (PDF). Water Resources Board. p. 279.
- ↑ Arumugam, S. (1969). Water Resources of Ceylon (PDF). Water Resources Board. p. 279.
- ↑ Arumugam, S. (1969). Water Resources of Ceylon (PDF). Water Resources Board. p. 279.