முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம்

முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம் (Muththuiyankaddu right bank maha vidyalayam)இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும்.

முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயம்
அமைவிடம்
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு மாவட்டம், வடமாகாணம்
இலங்கை
தகவல்
வகைஅரசுப்பள்ளி 1AB
குறிக்கோள்வாழக்கல்
சமயச் சார்பு(கள்)இந்து,கிறிஸ்தவம்
தொடக்கம்23 மே 1972
அதிபர்யோகராணி துரைசிங்கம்
ஆசிரியர் குழு24
தரங்கள்6-13
பால்கலவன்
கற்பித்தல் மொழிதமிழ்
இல்லங்கள்அலைமகள் ,கலைமகள், மலைமகள்
Alumni nameமுத்தையன்கட்டு வலதுகரை பழைய மாணவர் சங்கம்

வரலாறு

தொகு

இப் பாடசாலையானது குடியேற்ற திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட மக்களின் அடிப்படை எழுத்தறிவைப் புகட்டும் வகையில் 1966ம் ஆண்டு கிராம முன்னேற்ற சங்கக் கொட்டிலில் திருமதி சின்னதம்பி மேரிப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1972.05.23ம் திகதி 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக முத்துஐயன்கட்டு வலதுகரை அ.த.க பாடசாலை என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. 1984ம் ஆண்டு காலப்பகுதியில் இடைநிலைப்பிரிவு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1989ம் ஆண்டில் முதன் முறையாக க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு 23 மாணவர்கள் தோற்றினர். பல நெருக்கடியின் மத்தியில் 1995 ஆண்டு க.பொ.த.உயர தர கலைப்பிரிவு 9 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆண்டு ஆவணியில் பரீட்சைக்கு தோற்றிய 8 மாணவர்கள் 4 பாட சித்தியையும் ஒருவர் 3 பாட சித்தியையும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து 2007,2008 ம் ஆண்டு உயர்தர கலைப்பிரிவில் 100% உயர் பெறுபேரும் பெற்றதுடன் 2008 ம் ஆண்டு 100% மானோர் பல்கலைக்கழகமும் சென்றனர்.

2009 ம் ஆண்டு போர் காரணமாக ஆவணங்கள், உடைமைகள் ஆகியவற்றை இழந்த நிலையில் மீண்டும் 2010.2.23 உரிய இடத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டது. 2011 இல் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கமைய 1000 அபிவிருத்தி பாடசாலைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2012.01.2 முதல் தரம் 1-5 வரையான ஆரம்பவகுப்புக்களை உள்ளடக்கியதாக தனியான ஆரம்ப பாடசாலையாக மு/முத்துவிநாயகபுர் தமிழ் வித்தியாலயம் என்ற பெயரிடனும்,தரம் 6 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களை கொண்ட இடைநிலைப்பாடசாலையாக மு/முத்துஐயன்கட்டு வலதுகரை அ.த.க பாடசாலை எனவும் இரு பாடசாலைகளாக துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளராக இருந்த திருமதி மாலினி வெனிற்றன் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. 2012 ம் ஆண்டு யூலை மாதம் முதல் மு/முத்துஐயன்கட்டு வலதுகரை மாகாவித்தியாலயம் என்ற பெயருடன் இயங்கி வருகிறது. தொடர்ந்து 2013 இல் கிடைக்கப்பெற்ற கா.பொ.த சாதாரண தர பெறுபேற்றின் அடிப்படையில் உயர்தர விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன் 1AB தரத்தைக்கொண்ட பாடசாலையாக மாற்றப்பட்டது.

2014 ஆண்டு முதல் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் நோக்கோடு அமைக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்பஆய்வு கூடமானது 4 பிரதான கூடங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இதனை விட 23.5.2017 இல் உத்தியோக பூர்வமாக வர்த்தக பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது கா.பொ.த சாதாரண பரீட்சையிலும் உயர்தர கணித, விஞ்ஞான கலை,வர்த்தக பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுகொள்கின்ற பாடசாலையாக விளங்குகிறது. கல்வி துறை மாத்திரமின்றி இணைபாடவிதான செயற்பாடுகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

பாடசாலை அதிபர்கள்

தொகு
  • திருமதி மேரிப்பிள்ளை (1972.05.23-1985)
  • திரு.மகாலிங்கம் (1985-1994)
  • திரு.இ.ஆ.பரஞ்சோதி (1994-2005)
  • திரு சி.பாஸ்கரன்(2005-2007)
  • திரு.க.யோகேஸ்வரன் (2007.03.01-2016.1.12)
  • திரு.சி.நாகேந்திரராசா (2016.01.13-2022.01.01)
  • திருமதி யோகராணி துரைசிங்கம்(2022.01.01- இன்றுவரை)

பாடசாலைப் பண்

தொகு
முத்துஐயன் கட்டுறை மகாவித்தியாலயம்
மேன்மையுடன் என்றும் வாழியவே
அறிவொளி பெருக்கியே வாழியவே
அற நெறியோடன்பு வாழியவே (முத்து.....)
நீர் வளம் நிலவளம் நிறைந்திடும் பதியில்
நிகரில்லா செல்வங்கள் பெருகிடவே
மேன்மையில் சிறந்த நற்கல்வி பயில்வோம்
நற்பிரசையாக வளந்திடுவோம் (முத்து.....)
செந்தமிழ் ஆங்கிலம் சீரிய கலைகள்
முந்துறு அறிவியல் கணிதமும் மனையியல்
சமூக கல்வியும் அழகியல் வர்த்தகமும்
சமயமும் ஒழுக்கமும் விவசாயமும் ஓங்கிட (முத்து.....)
கடமை கண்ணியம் கட்டுப்பாடோடு
கருணைப் பண்புகள் பெரிகிடவே
நற்றதமிழ் ஓங்கிட நாடு சிறந்திட
எண்டிசையும் புகழ் ஏற்றிடவே. (முத்து.....)

தூர நோக்கு

தொகு

வேகமாக மாறிவரும் உலகில் எழும் சவால்களுக்கு முகம்கொடுப்பதோடு சமூக நீதியினை நிலை நாட்டும் சமூக உறுப்பினர்களை தோற்றுவித்தல்.

பணிக்கூற்று

தொகு

பெளதீகநிதி வளங்களை தேடுதலும் அதனை உச்ச பயன்பாடுடையதாக்குவதன் மூலம் பங்காளிகளின் நீதித்தன்மையுடனான வினைத்திறன் மிக்க செயலாற்றுகைக்கூடாகவும் உலகியல் மாற்றங்களை மாணவர்களறிந்து அதற்கேற்ப செயற்பட வாய்ப்பளித்தல்.

மேற்கோள்கள்

தொகு

[1]

[2] [3]

  1. முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தின் சுவடுகள் 2020
  2. https://locator.eduportalbd.com/global/lk/details.php?ins=12056
  3. https://np.gov.lk/wp-content/uploads/2019/03/School-Details.pdf