முந்திரி இல்லம்
முந்திரி இல்லம் (Cashew House) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் நகரத்தின் முண்டக்கல் பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநில முந்திரி மேம்பாட்டுக் கழகத்தின் தலைமையகமும் இதுவேயாகும். பண்டைய குயிலோன் எனப்படும் கொல்லத்தின் வரலாறு மற்றும் கொல்லம் நகரத்தின் முந்திரி வணிகத்துடன் இப்பகுதி மிகவும் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளது. [1]
முந்திரி இல்லம் Cashew House | |
---|---|
கொல்லம் நகர முந்திரி இல்லம் தொலைப் பார்வை | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்தியா |
நகரம் | முண்டக்கல், கொல்லம் நகரம் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 8°52′37″N 76°35′45″E / 8.876947°N 76.595962°E |
நிறைவுற்றது | 1935 |
கட்டுவித்தவர் | இலிண்டுசே இயான்சன் |
வரலாறு
தொகுகொல்லம் நகரத்தின் முந்திரி வணிகமும் ஏற்றுமதியும் உலகப் புகழ் பெற்றதாகும். இதனால்தான் கொல்லம் உலக முந்திரியின் மூலதனம் என்று அழைக்கப்படுகிறது. 1935 ஆம் ஆண்டு கொல்லம் நகரில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான இரண்டு மாடி கட்டிடம் அமெரிக்க தொழிலதிபர் லிண்ட்சே இயான்சனுக்கு சொந்தமானதாகும். இவர் நியூயார்க்கை தளமாகக் கொண்ட உணவு நிறுவனத்தின் பிரதிநிதியாக கேரளா வந்தார். கேரளாவின் இயற்கை எழிலால் ஈர்க்கப்பட்டு தனது மகளுக்கு ‘கேரளா’ என்று பெயரிட்டார். கொல்லம் நகரில் முந்திரி வியாபாரம் செய்ததால் இயான்சன் தனது காலத்தின் பெரிய பணக்காரர்களில் ஒருவரானார். ஆனால், இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அரசாங்கம் இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டபோது இயான்சன் தனது நாடான அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இயான்சன் தனது வீட்டை நன்கு நிறுவப்பட்ட கொல்லம் வங்கியில் அடகு வைத்துவிட்டு போருக்குப் பின்னர் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் தனது முந்திரி வியாபாரத்தை தனது மேலாளர் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தார்,
பின்னர் சுவாமிநாதன் உலகப் போர் காரணமாக முந்திரி வணிகம் நட்டத்தில் இயங்குவதாகவும் வங்கி கட்டிடத்தை இணைக்கப் பார்க்கிறது என்றும் இயான்சனிடம் தெரிவித்தார். மேலாளர் தெரிந்தே இயான்சனின் வணிகத்திலிருந்து இலாபத்தைத் மறைத்து திசை திருப்பினார் எனக் கூறப்படுகிறது. அதன்பின்னர் வங்கி சொத்தை இணைத்துக் கொண்டது. கொல்லம் கடற்கரையோரப் பகுதியிலிருந்து அருமண் உலோகத்தாதுக்களை வெட்டியெடுக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கேரள மினரல்சு அண்டு மெட்டல்சு நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் எஃப்..எக்சு. பெரேரா முந்திரி இல்ல கட்டிடத்தை ஏலத்தில் வாங்கினார். காலப்போக்கில் இயான்சனின் பழைய பங்களாவை வாங்கிய கேரள அரசு முந்திரி அபிவிருத்தி ஆணைய நிறுவனத்திற்கான தலைமையிடமாக அறிவித்தது. அன்று முதல் கொல்லம் மற்றும் முழு கேரளாவிற்குமான முந்திரி வியாபாரத்தை கையாளும் பொதுத்துறை நிறுவனமாக முந்திரி இல்லம் செயல்படுகிறது. [2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Kerala State Cashew Development Corporation Limited". 2009. Archived from the original on 2014-10-20.
- ↑ Mohammed, Sham (18 October 2014). "Cashew HQ tells story of a betrayal". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ "Yellow pages".