முனீசுவர் நாத் பண்டாரி
முனீசுவர் நாத் பண்டாரி (Munishwar Nath Bhandari)(பிறப்பு 13 செப்டம்பர் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். கூடுதலாகப் பண்டாரி இராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2]
மாண்புமிகு நீதியரசர் முனீசுவர் நாத் பண்டாரி | |
---|---|
தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 பிப்ரவரி 2022[1] | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
பொறுப்பு தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம் | |
பதவியில் 22 நவம்பர் 2021 – 13 பிப்ரவரி 2022 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
பொறுப்பு தலைமை நீதிபதி அலகாபாத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 26 ஜூன் 2021 – 10 அக்டோபர் 2021 | |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி அலகாபாத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 15 மார்ச் 2019 – 21 நவம்பர் 2021 | |
பரிந்துரைப்பு | ரஞ்சன் கோகோய் |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 5 ஜூலை 2007 – 14 மார்ச் 2019 | |
பரிந்துரைப்பு | கே. ஜி. பாலகிருஷ்ணன் |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 செப்டம்பர் 1960 |
நீதிபதி பதவி
தொகுஜூலை 5, 2007 அன்று இராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 15 மார்ச் 2019 அன்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின்னர் 26 ஜூன் 2021 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாடு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட பின்னர், அந்த பணியிடத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பண்டாரி நியமிக்கப்பட்டு பின்னர் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Correspondent, Legal (2022-02-14). "Munishwar Nath Bhandari sworn in as Chief Justice of Madras High Court". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
- ↑ "Justice M N Bhandari Transferred From Rajasthan HC to Allahabad HC [Read Notification"]. Live Law.in. 5 March 2019. https://www.livelaw.in/news-updates/justice-m-n-bhandari-transferred-from-rajasthan-hc-to-allahabad-hc-read-notification-143338.
- ↑ NETWORK, LIVELAW NEWS (2021-11-16). "Centre Notifies Transfer Of Justice MN Bhandari From Allahabad HC To Madras HC". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ "Justice M N Bhandari sworn-in as CJ of Madras HC". Deccan Herald (in ஆங்கிலம்). 2022-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.