முனீஸ்வரன் (ஓவியர்)
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (ஏப்பிரல் 2024) |
முனீஸ்வரன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்.[1] இவரது ஓவியங்கள் தத்ரூப பாணி ஓவியங்களாக உள்ளன. அடர் நிறங்களை பயன்படுத்துதல், ஆடைகள் உள்ளிட்ட சிறு விசயங்களுக்கும் ஓவியத்தில் முக்கியத்துவம் கொடுத்தல் போன்றவை இவரது ஓவியத்தின் தனித்தன்மைகள்.[2]
முனீஸ்வரன் | |
---|---|
பிறப்பு | திருமங்கலம், மதுரை | செப்டம்பர் 25, 1991
கல்வி | இளங்கலை பட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி |
அறியப்படுவது | தத்ரூப பாணி ஓவியங்கள் |
பெற்றோர் | சக்திவேல் -மங்களம் |
பிறப்பும் படிப்பும்
தொகுமுனீஸ்வரன் 1991 செப்டம்பர் 25 இல் சக்திவேல் -மங்களம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[2] பள்ளி படிப்பை மதுரை பி.கே.என் ஆண்கள் பள்ளியிலும், மதுரை லயோலா கல்லூரியில் ஐ.டி.ஐ எலக்ட்ரீசயன் படிப்பும் முடித்தார்.[1] பின்பு கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
கண்காட்சி
தொகுவிருதுகள்
தொகு- கல்லூரியில் படிக்கும் பொழுது இவரின் ஓவியம் "கேம்லின் ஆர்ட் பவுண்டேசன்" நடத்திய போட்டியில் முதலிடம் பெற்றது.[1]
- கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை நடத்திய மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி.
- மாநில அளவிலான தமிழக அரசு விருது, 2014[சான்று தேவை]
- கஸ்தூரி சீனிவாசன் மெமோரியல் விருது, 2014, 2015
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் முனீஸ்வரன்". www.tamilonline.com.
- ↑ 2.0 2.1 https://tamil.thehindu.com/society/lifestyle/வண்ணத்துக்குள்-ஒளிந்திருக்கும்-ரகசியம்/article9598841.ece/amp/ வண்ணத்துக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!- ப்ரதிமா- 24 மார்ச் 2017